பெருமாளே புரட்டாசி மாசம் அதுவுமா இப்படியா? பன்னீருக்கு பதில் சிக்கன்.. குமுறும் நடிகை!
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், மூன்று படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நிற்க கூட நேரம் இல்லாமல் படு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவினை போட்டு குமுறி உள்ளார். இதைப்பார்த்த அவரின் ரசிகர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
அதாவது, சாக்ஷி அகர்வால், ஸ்விகியில் பாலக் பன்னீர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பன்னீர் ரைசுக்கு பதில் அதில் சிக்கன் துண்டுகள் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சாக்ஷி, அதை போட்டோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நான் பிறந்ததில் இருந்தே, அசைவம் சாப்பிட்டது இல்லை. ஆனால், இந்த ஸ்விகி இன்று என்னை அசைவம் சாப்பிட வைத்துவிட்டது என ஸ்விகி நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் பலர், சாக்ஷி இப்படி நிலைமையா என ஆறுதல் கூறிவருகின்றனர்.

ராஜா ராணி: மாடல் அழகியான நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால், மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து, விளம்பரங்களில் படங்களில் நடித்த இவர், சினிமா வாய்ப்பை தேடி அலைந்த போது தான், அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் நான் நடித்து இருக்கவே கூடாது, ஒரு நல்ல கதாபாத்திரம் படம் முழுக்க வருவீங்கனு சொல்லி, அட்லீ ஏமாற்றிவிட்டார் என பேட்டி ஒன்றில் புலம்பி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து விஸ்வாசத்தில் நயன்தாராவின் தோழியாகவும், காலா படத்தில் ரஜினியின் மருமகளாகவும் சின்ன ரோலில் நடித்திருந்தார்.
ஃபயர் படத்தில் அதீத கவர்ச்சி: அதன் பின் பிக்பாஸ் மேலும், நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓரளவிற்கு தெரிந்த முகமாக மாறினார் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் ஆர்யாவுடன் பின் டெடி, அரண்மனை 3, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து, சாக்ஷி அகர்வால் அண்மையில், வெளியான ஃபயர் திரைப்படத்தில் ஒரு அட்டகாசமான ரோலில் அதீத கவர்ச்சியுடன் நடித்திருந்தார்.
கைவசம் உள்ள படம்: அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து கொண்டு வந்த நடிகை சாக்ஷி, தனது நெருங்கிய நண்பராக இருந்த நவனீத் மிஸ்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு சாக்ஷி அகர்வால், கணவருடன் ஹனிமூன் செல்லாமல், ஃபயர் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு, படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதே மகிழ்ச்சியுடன் கணவருடன் ஹனிமூன் சென்றிருந்தார். தற்போது சாக்ஷி அகர்வால் The Case Diary என்கிற மலையாள திரைப்படத்திலும்,Guest : Chapter 2,The Night என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











