For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்ப என்னை 'குண்டு பூசணிக்காய்'னு சொல்வாங்க.. தனது ஸ்கூல் போட்டோ பதிவிட்டு பிக்பாஸ் நடிகை பெருமை!

  By
  |

  சென்னை: தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல பிக்பாஸ் நடிகை, தன்னை குண்டுபூசணிக்காய் என்று கிண்டலடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

  தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், சாக்‌ஷி அகர்வால்.

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிக பிரபலமடைந்தார். இப்போது, ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார்.

  வெறும் உள்ளாடைகளுடன் கெத்தாய் நிற்கும் பிரபல நடிகை.. அவரே பிறந்து வந்துவிட்டார் என உருகும் ரசிகாஸ்!வெறும் உள்ளாடைகளுடன் கெத்தாய் நிற்கும் பிரபல நடிகை.. அவரே பிறந்து வந்துவிட்டார் என உருகும் ரசிகாஸ்!

  ஒர்க் அவுட் போட்டோ

  ஒர்க் அவுட் போட்டோ

  கொரோனா லாக்டவுன் காரணமாக பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதள பக்கங்களில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். தங்களது ஒர்க் அவுட் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் தங்கள் பழைய த்ரோபேக் புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர். தினமும் இரண்டு, மூன்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதையும் சில நடிகைகள் செய்து வருகின்றனர்.

  ஒர்க் அவுட் புகைப்படம்

  ஒர்க் அவுட் புகைப்படம்

  இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், சாக்‌ஷி அகர்வால். உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இதை போல பண்ணுங்க என்று ரசிகர்களிடமும் சொல்வார். தினமும் இரண்டு மூன்று முறை, போட்டோ பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

  சிறுவயது போட்டோ!

  சிறுவயது போட்டோ!

  அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கின்றனர். இந்நிலையில் இப்போது தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால். அது அவர்தான் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. அதில் தனது பிளாஷ்பேக்கை குறிப்பிட்டிருக்கிறார், நடிகை சாக்‌ஷி அகர்வால். அதில் அவர் கூறியிருப்பதாவது:

  சக தோழிகள்

  சக தோழிகள்

  இது நான் தான், என்பதை எத்தனை பேர் நம்புகிறார்கள். உண்மை, அது என் புகைப்படம்தான். என் முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைப்பது அப்போது, எனக்கு சவாலானதாக இருந்தது. பள்ளியில் சக தோழிகள், சீனியர்கள், அழகான மாணவிகள் அல்லது ஹாட் கேர்ள்ஸ் எல்லோரும் என்னை கிண்டல் செய்வார்கள்.

  குண்டு பூசணிக்காய்

  குண்டு பூசணிக்காய்

  சிலர் என்னைப் புத்தகப்புழு என்றும் குண்டு பூசணிக்காய் என்றும் சொல்வார்கள் (அவர்களை குறைகூற வேண்டாம். உண்மையில் நன்றி சொல்ல வேண்டும்). இதைக் கண்டுகொள்ள மாட்டேன். அப்போது படிப்பு மட்டுமே என் மண்டையில் இருந்தது. எனது கொழுக் மொழுக் முகத்தை நான் ரசித்தேன், விரும்பினேன். இப்போது இருக்கும் முகத்தையும் விரும்புகிறேன்.
  கொழுப்பை குறைக்க நான் உடலை பட்டினிப் போட்டதில்லை.

  நம்ப முடியாத ஆர்வம்

  நம்ப முடியாத ஆர்வம்

  அல்லது ஆபரேஷனோ, கொழுப்பை எரிக்கும் செயற்கையான சிகிச்சைக்கோ சென்றதில்லை. அதனால் அதிக நாட்கள் எடுத்தது. அதோடு அந்த வலி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. என்னுடைய ஒர்க் அவுட்டை மீறி நான் இன்னும் என்னை நேசிக்கிறேன். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, நம்ப முடியாத ஆர்வம் இருந்தால், அது வாழ்க்கையில் உங்களை எங்கும் கொண்டு செல்லும். எதை செய்ய வேண்டுமோ, அதில் மனதை வைத்து கடுமையாக கவனம் செலுத்தினால் இந்த உலகம் உங்களுக்கான பாதையை தேடி தரும்.

  புறக்கணிக்க வேண்டும்

  புறக்கணிக்க வேண்டும்

  நான் இப்போது சரியான இடத்தில் இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் எனது பழைய புகைப்படத்தைப் பதிவு செய்வதில் பெருமைகொள்கிறேன். யார் உங்களை கிண்டலடித்தாலும் அவமானப்படுத்தினாலும் எதிர்மறையான விஷயங்களை புறக்கணிக்க வேண்டும் என்று தளபதி சொல்லி இருக்கிறார் இல்லையா? பின்பற்றுங்கள், உங்களுக்காக. இவ்வாறு நடிகை சாக்‌ஷி அகர்வால் கூறியுள்ளார்.

  English summary
  Actress Sakshi Agarwal shares her School day photo on her instagram.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X