»   »  சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்தாங்க, நீங்க பாத்தீங்க?: ஓவியா

சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1.5 கோடி சம்பளம் கொடுத்தாங்க, நீங்க பாத்தீங்க?: ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்திற்க்கு 1.5 கோடியா?-ஓவியா விளக்கம்-வீடியோ

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க, கடையை திறந்து வைக்க ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியது குறித்து ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க, ஓஎம்ஆரில் கடையின் புதிய கிளையை திறந்து வைக்க ஓவியாவுக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

Salary issue: Oviya clarifies

ஓவியாவுக்கு தற்போது தானே மார்க்கெட் பிக்கப்பானது. அதற்குள் ரூ. 1.5 கோடி சம்பளமா அடேங்கப்பா என்று ஆளாளுக்கு வியந்தனர். இந்நிலையில் சம்பளம் குறித்து ஓவியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டுக்கு ஏற்றபடி தான் சம்பளம் பெறப்பட்டுள்ளது என்றும், ரூ. 1.5 கோடி என்பது எல்லாம் உண்மை இல்லை என்றும் ஓவியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஓவியாவுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை.

English summary
Oviya has clarified that she hasn't received Rs. 1.5 crore salary to act in Saravana stores advertisement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil