»   »  சலசலக்கும் சலோனி

சலசலக்கும் சலோனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை வீரன் நாயகி சலோனி, அச்சு அசல் மும்பைக்காரியாக இருந்தாலும், மதுரை பக்கத்து பெண்களின் உணர்வுகளை உள் வாங்கிக் கொண்டு படு கலக்கலாக நடித்துள்ளாராம்.

ஜித்தன் ரமேஷ் நடிப்பில், அப்பா ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மதுரை வீரன். அந்தக் காலத்து வாத்தியார் படத் தலைப்பாக இருக்கிறதே, மதுரை வீரன் படத்தை ரீமேக் செய்து விட்டார்களோ என குழம்பி விட வேண்டாம். அது வேற, இது வேறயாம்.

நம்ம மேட்டர் சலோனி. மும்பை வரவான சலோனியைப் பிடித்த கதை பெரும் கதையாம். மதுரை வீரன் கதைப்படி படத்தோட நாயகி மதுரைப் பெண். இதனால் மதுரைப் பெண்களைப் போன்ற முகவாகு, பேச்சுவாகு உள்ள பெண்ணாகப் பார்த்தார்களாம்.

ஒரு நடிகையும் அவர்களின் வலையில் சிக்கவில்லையாம். சந்தியாவைக் கூட யோசித்தார்களாம். இருந்தாலும் திருப்தியாக வரவில்லை. இந்த நிலையில்தான் சலோனியின் புகைப்படம் எதேச்சையாக கிடைக்க கூப்பிட்டு வந்து மேக்கப் டெஸ்ட் செய்துள்ளனர். திருப்தி வரவே உடனே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணி விட்டார்களாம்.

சலோனி தமிழுக்குத்தான் புதுசு. ஆனால் இந்தியில் ஒரு தினுசான இளசு. அங்கு சல்மான் கான் படத்தில் கூட நடித்துள்ளாராம். தமிழ் சினிமா பற்றி நிறையக் கேள்விபட்டுள்ளாராம். நடிக்க வாய்ப்பு வந்தால் போய் விடலாம் என காத்திருந்தாராம். இப்போது மதுரை வீரன் பட வாய்ப்பு வரவே டக்கென ஓடி வந்து விட்டாராம்.

கிளாமர் கலக்கலுக்கும் சலோனி ரெடியாம், கிராமத்து கேரக்டர் என்றாலும் டபுள் ஓ.கே.வாம். நல்ல அழகுடன், நச்சென இருக்கும் சலோனி, இப்போதே கோலிவுட்டில் அலை பரப்ப ஆரம்பித்து விட்டார்.

படத்தில் பாப்பாவுக்கு மாடர்ன் டிரஸ் ரொம்பவே குறைச்சலாம். பாவாடை தாவணியோடு ரமேஷோடு லாவணி பாடுகிறார். கண்டாங்கிச் சேலையில் கலகலப்பாக வருகிறார். இப்படி காஸ்ட்யூமிலேயே சல சலக்க வைக்கும் சலோனி, நடிப்பிலும் பிரமாதப் படுத்தியுள்ளாராம்.

மதுரை வீரன் வருவதற்குள் சில படங்களில் புக் ஆகும் வாய்ப்பும் உள்ளதாம். அப்படி ஒரு மகாத்மியத்தோடு கலகலக்க ஆரம்பித்து விட்டது சலோனியின் மார்க்கெட்.

சலோனியை தமிழ் திரையுலகம் சலோ என கூறாமல் ஆவோ ஆவோ என ஆரவாரமாக கூறும் என நம்புவோம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil