»   »  பாண்டிச்சேரி தெருக்களில் பாசி, ஊசி, ஹேர்பின் விற்ற ‘சரபம்’ சலோனி!

பாண்டிச்சேரி தெருக்களில் பாசி, ஊசி, ஹேர்பின் விற்ற ‘சரபம்’ சலோனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒலியும், ஒளியும் படத்திற்காக பாண்டிச்சேரி தெருக்களில் ஹேர்பின், பேட்டரி விற்கும் பெண்ணாக நடித்துள்ளார் நடிகை சலோனி. சலோனியின் இயல்பான நடிப்பால், நிஜமாகவே சில பெண்கள் அவரிடம் ஹேர்பின் வாங்கிச் சென்றார்களாம்.

சரபம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சலோனி. இவர் தற்போது ஒலியும், ஒளியும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சலோனிக்கு கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி வேடம்.

இந்நிலையில், இப்படம் தொடர்பாக சலோனி கூறியதாவது :-

சவால்...

சவால்...

கண் தெரியாத பெண் வேடத்தில் நடிப்பது எனக்கு பெரும் சவாலாக இருந்தது. சரபம் படத்தில் அல்ட்ரா மாடல் பெண்ணாக நடித்துவிட்டு அப்படியே அந்த கேரக்டருக்கு எதிரான ஒரு கேரக்டரில் தற்போது நடித்து வருகிறேன்.

பார்வையற்ற பெண் வேடம்...

பார்வையற்ற பெண் வேடம்...

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. கண் தெரியாத நான் ஹேர்பின், பேட்டரி போன்றவற்றை தெருத்தெருவாக விற்பனை செய்யும் பெண்ணாக நடித்தேன்.

இயல்பான நடிப்பு...

இயல்பான நடிப்பு...

ஷூட்டிங் என்பதை அறியாமல் பல பெண்கள் என்னிடம் ஹேர்பின் வாங்கினார்கள். அந்த அளவுக்கு காட்சிகள் மிக இயல்பாக வந்தன.

கருப்பாக வேண்டும்...

கருப்பாக வேண்டும்...

இந்த படத்தில் நான் கொஞ்சம் கருப்பாக மாற வேண்டும் என்பதற்காக ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் என்னை மூன்று நாட்கள் வெயிலில் நிற்க வைத்தார்.

கண் தானம்...

கண் தானம்...

இப்படத்தில் எனக்கு ஜோடியாக லண்டனை சேர்ந்த ஜான் என்பவர் நடிக்கின்றார். இந்த படம் கண்தானம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Salony is excited about her latest role in Oliyum Oliyum, in which she plays a visually impaired street vendor in Puducherry.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil