»   »  நடிகையர் திலகம் சாவித்ரியாக நடிக்கும் சமந்தா: நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

நடிகையர் திலகம் சாவித்ரியாக நடிக்கும் சமந்தா: நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகையர் திலகமாக சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

1950 மற்றும் 60களில் கோலிவுட், டோலிவுட்டின் முடிசூடா ராணியாக இருந்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. இந்த பொண்ணு நடிப்பில் என்னை தூக்கி சாப்பிட்டு விடும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனே சாவித்ரியை பார்த்து பயந்துள்ளார்.

அப்பேர்பட்ட சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுகிறது.

சமந்தா

சமந்தா

தெலுங்கு இயக்குனர் நாக் அஷ்வின் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ள சமந்தாவை சாவித்ரியாக நடிக்குமாறு நாக் கேட்டுள்ளாராம்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

சாவித்ரியின் படத்தில் நடிக்க சமந்தாவும் ஆர்வமாக உள்ளாராம். இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாயகி

நாயகி

நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க விரும்பிய சமந்தாவுக்கு இந்த பட வாய்ப்பு வந்துள்ளது. அதை அவர் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நித்யா மேனன்

நித்யா மேனன்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகையர் திலகமாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக முன்பு கூறப்பட்டது. இந்நிலையில் சமந்தாவின் பெயர் அடிபடுகிறது.

English summary
According to reports, Samantha is approached to act as Savitri in her bipoic to be taken in Tamil and Telugu.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil