மீண்டும் படங்களுக்கு ஓகே சொல்லும் சமந்தா... குழப்பத்தில் தயாரிப்பாளர்கள்

சென்னை : 2019 ல் நடித்த ஓ பேபி படத்திற்கு பிறகு படிப்படியாக புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துக் கொண்டு வருகிறார் சமந்தா. குறிப்பாக தமிழில் வெளிவந்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்திற்கு பிறகு ரொம்பவே குறைத்து விட்டார்.

தற்போது தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் மட்டுமே சமந்தா நடித்து வருகிறார். டைரக்டர் குணசேகர் இயக்கும் சாகுந்தலம் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் அடுத்த படத்தில் சமந்தாவை புக் செய்வதா, வேண்டாமா என தயாரிப்பாளர்கள் தயங்கி வருகின்றனர்.

பிரேக் அறிவித்த சமந்தா

பிரேக் அறிவித்த சமந்தா

சமீபத்தில் பொழுதுபோக்கு தளம் ஒன்றில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய சமந்தா, தற்போது ஒப்புக் கொண்ட படங்களை முடித்த பிறகு சில காலம் பிரேக் எடுத்துக் கொண்டு, பிறகு அடுத்த படங்களின் வேலைகளை துவக்கலாம் என நினைப்பதாக கூறினார். இதனால் சமந்தா இனி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

கணவரை பிரிந்து வாழ்கிறாரா

கணவரை பிரிந்து வாழ்கிறாரா

இதற்கிடையில் சோஷியல் மீடியா பக்கங்களில் தனது பெயர் டிஸ்பிலேவை எஸ் என மாற்றிக் கொண்டார். இதனால் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய போகிறார் என வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து, சமந்தா ஏற்கனவே பல மாதங்களாக கணவரை பிரிந்து ஐதராபாத் வீட்டில் தனியாக தான் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.

நாகர்ஜுனா சமரச முயற்சி

நாகர்ஜுனா சமரச முயற்சி

பிரிந்து வாழும் சமந்தாவையும், நாக சைதன்யாவையும் சேர்த்து வைக்க மாமனார் நாகர்ஜுனா தீவிர முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் தான், நாகர்ஜுனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சமந்தாவிற்கு நாகர்ஜுனா நன்றி கூட தெரிவிக்கவில்லையாம்.

வீடு வாங்கினார்களா

வீடு வாங்கினார்களா

மற்றொரு தகவலாக, சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து கோவாவில் பிரம்மாண்ட பண்ணை வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் கூறப்பட்டது. கோவா மட்டுமின்றி மும்பையிலும் இவர்கள் இருவரும் இணைந்து வீடு வாங்கி உள்ளதாகவும், இவர்கள் விவாரத்து செய்ய போவதாக கூறுவது முற்றிலும் வதந்தி எனவும் கூறப்பட்டது.

புதிய படங்களுக்கு ஓகே

புதிய படங்களுக்கு ஓகே

கணவருடனான பிரச்சனை காரணமாக தான் சமந்தா புதிய படங்களில் ஒப்புக் கொள்ளாமல், பிரேக் எடுக்க போவதாக அறிவித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தெலுங்கில் புதிய படங்கள் சிலவற்றில் நடிக்க சமந்தா ஓகே சொல்லி, ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுள்ளாராம்.

கவர்ச்சி ஃபோட்டோஷுட்

கவர்ச்சி ஃபோட்டோஷுட்

சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளாராம் சமந்தா. இதனால் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறாராம் சமந்தா.

கேரக்டர் ரோல் தேடும் சமந்தா

கேரக்டர் ரோல் தேடும் சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சமந்தா இணைந்து நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்ப்பட உள்ளது. நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து தான் நடித்து வருவதாலேயே படங்கள் குறைந்து விட்டதாக சமந்தா தரப்பில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X