அறிவு இருக்கா... பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய சமந்தா

திருப்பதி : கடந்த சில மாதங்களாகவே தெலுங்கு திரையுலகில் சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து வதந்தி தான் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறது. சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து தனது பெயரின் பின்னால் இருந்த அக்கினேனியை சமந்தா நீக்கியது முதல் ஆரம்பித்த விவாகரத்து வதந்தி, தொடர்ந்து பற்றி எரிகிறது.

Recommended Video

Vijaysethupathi Romance with Samantha & Nayanthara - Kathuvakkula Rendu Kadhal

சமந்தா தனது காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்து வாழ்வதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க மாமனார் நாகர்ஜுனா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இருந்தாலும் விவாகரத்திற்கான செயல்பாடுகள் கோர்ட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

வாழ்த்து கூறிய சமந்தா

வாழ்த்து கூறிய சமந்தா

இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியானது. செப்டம்பர் 24 ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. பலராலும் பாராட்டப்பட்ட இந்த டிரைலர் பற்றி சமந்தா என்ன சொல்ல போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இது பற்றியசோஷியல் மீடியாவில் கருத்து பதிவிட்ட சமந்தா, படம் வெற்றி அடைய லவ் ஸ்டோரி டீமுக்கு வாழ்த்துக்கள் என கூறி இருந்தார்.

ஓயாத விவாகரத்து வதந்தி

ஓயாத விவாகரத்து வதந்தி

இதனால் சிலர், சமந்தா தனது கணவரின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதால் அவர்களுக்கு இடையே உறவு நன்றாக உள்ளதாக கூறினர். இன்னும் சிலர், சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரை குறிப்பிடாமல் எதற்காக பொதுவாக வாழ்த்து சொன்னார். அதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளது. விவாகரத்து தகவல்கள் உண்மை தான் என்றனர்.

குழந்தைக்காக தான் ப்ரேக்

குழந்தைக்காக தான் ப்ரேக்

ஆனால் மற்றொரு தகவலின் படி, சாகுந்தலம் படத்தின் ப்ரோமோவிற்காக தான் சமந்தா, டிஸ்பிளே பெயரை மாற்றி உள்ளார். இந்த ஸ்டார் தம்பதி குழந்தை பெற்றுக் கொள்ள தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக தான் சமீபத்தில் சமந்தா சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொள்ள போவதாக அறிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்

கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தவற்காக நேற்று அதிகாலை சமந்தா சென்றுள்ளார். சாமி தரிசனம் முடித்து வெளியே வந்தவரிடம் திருப்பதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், விவாகரத்து வதந்தி பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டு, மைக்கை நீட்டி உள்ளார்.

கடுப்பாகி திட்டிய சமந்தா

கடுப்பாகி திட்டிய சமந்தா

அதுவரை பிளாக் மாஸ்க் அணிந்து, அமைதியாக தலையை குனிந்தபடி நடந்து வந்த சமந்தா, கடுப்பாகி அந்த பத்திரிக்கையாளரை முறைத்துள்ளார். பிறகு, நான் கோயிலில் இருக்கிறேன். அறிவு இருக்கா என நெற்றியில் கை வைத்து, கோபமாக கேட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார். கோயில் நிர்வாகிகளும் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

விவாகரத்து வதந்திகள் பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்த சமந்தா, தற்போது கடுப்பாகி பத்திரிக்கையாளரிடம் கடுமையாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் பரவி, வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சமந்தாவின் கோபம் நியாயமானது தான் என கருத்து தெரிவித்துள்ளனர்.

கோரிக்கை வைத்த நாக சைதன்யா

கோரிக்கை வைத்த நாக சைதன்யா

சமீபத்தில் தான் தனது தெரிந்த பத்திரிக்கையாளர்கள் வட்டத்திடம், தயவு செய்து விவாகரத்து வதந்தி பற்றி கேள்வி கேட்காதீர்கள் என நாக சைதன்யாவும் கேட்டுக் கொண்டார். சினிமா தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்கும் படியும் அவர் வேண்டுகோள் வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X