»   »  சொந்த செலவில் காதலுக்கு சூனியம் வைத்த சமந்தா

சொந்த செலவில் காதலுக்கு சூனியம் வைத்த சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது காதலர் நாக சைதன்யாவை சின்ன ஹீரோ என்று சமந்தா கூறியது நாகர்ஜுனா குடும்பத்தாரை முகம் சுளிக்க வைத்துள்ளதாம்.

கோலிவுட்டோடு சேர்த்து டோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்.

இந்த காதலுக்கு நாக சைதன்யா வீட்டில் எதிர்ப்பாக உள்ளது. ஏற்கனவே சமந்தாவை மருமகளாக ஏற்க முடியாது என்று அவர்கள் கூறி வரும் நிலையில் இவர் வேறு தேவையில்லாமல் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

Samantha calls her lover Naga Chaitanya as small hero

ஜூனியர் என்.டி.ஆர்., சமந்தா நடித்துள்ள ஜனதா கராஜ் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. முன்னதாக படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா கூறுகையில்,

பிருந்தாவனம் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்கும்போது மிகவும் பயமாக இருந்தது. அப்போது நான் சின்ன ஹீரோவான நாக சைதன்யாவுடன் மட்டும் நடித்திருந்தேன் என்றார்.

இந்த பேச்சு தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    English summary
    Samantha has irked Nagarjuna's family by calling her boyfriend Naga Chaitanya as small hero.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil