»   »  'இந்த' மூன்றும் இல்லாமல் சமந்தாவால் வாழ முடியாதாம்!

'இந்த' மூன்றும் இல்லாமல் சமந்தாவால் வாழ முடியாதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் நாக சைதன்யா, மஸ்கட்டி ஐஸ்கிரீம் மற்றும் வேலை இல்லாமல் வாழ முடியாது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. சமந்தா தற்போது விஷாலின் இரும்புத் திரை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

நாக சைதன்யா

எந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, நாக சைதன்யா, மஸ்கட்டி ஐஸ்கிரீம், வேலை என தெரிவித்துள்ளார் சமந்தா.

மகேஷ் பாபு

உங்கள் கெரியரில் உங்களுக்கு சொல்லப்பட்ட சிறந்த அறிவுரை என்ற கேள்விக்கு, அனைத்து படங்களையும் உங்களின் முதல் படமாக நினைக்க வேண்டும் என்று மகேஷ் பாபு கூறிய அறிவுரை என சமந்தா கூறியுள்ளார்.

காதல்

ஏன் நான் இல்லாமல் நாக சைதன்யாவை தேர்வு செய்தீர்கள் என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு சமந்தா கூறுகையில், ஏனென்றால் நான் உங்களை 8 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கவில்லை, நல்ல நண்பராகவில்லை என்றார்.

சிவன்

உங்களுக்கு பிடித்த கடவுள் யார் என்ற கேள்விக்கு சிவா என்று பதில் அளித்துள்ளார் சமந்தா.

English summary
Actress Samantha tweeted that she can't live without Naga Chaitanya, Masqati ice cream and work.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil