திடீரென டிஸ்பிளே பெயரை மாற்றிய சமந்தா....அக்கினேனி எங்கே போச்சு

சென்னை : தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. திறமையான நடிகை, இயற்கை ஆர்வலர் என பல முகங்களைக் கொண்டவர் சமந்தா. ஹீரோக்களுக்கு இணையாக அர்ப்பணிப்புடன், கடினமாக உழைத்து, தனது சிறப்பான பங்களிப்பை படங்களில் அளிக்கக் கூடியவர்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சமந்தாவும் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கில் குணசேகர் இயக்கும் சாகுந்தலம், கேம் ஓவர் டைரக்வர் அஸ்வின் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

 வைரலாகும் சமந்தாவின் வீடியோ

வைரலாகும் சமந்தாவின் வீடியோ

சமீபத்தில், சீமராஜா படத்திற்காக தான் சிலம்பம் கற்ற பழைய வீடியோ, ஃபேமிலிமேன் ஷுட்டிங்கின் போது கேரவனில் நடனமாடி வீடியோ ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வைரலாக்கி இருந்தார் சமந்தா. அத்துடன் தான் மீண்டும் சிலம்பம் பயிற்சியை தொடர போவதாகவும் கூறி இருந்தார்.

நாக சைதான்யாவுடன் காதல்

நாக சைதான்யாவுடன் காதல்

இவர் 2010 ல் கவுதம் மேனன் இயக்கிய, ஏ மாய சீசாவே படத்தில் நடித்த போது தெலுங்கு நடிகரும், பிரபல நடிகர் நாகர்ஜுன் - அமலாவின் மகனான நாக சைதன்யா மீது காதல் ஏற்பட்டது. பல ஆண்டு காதலுக்கு பிறகு 2017 ல் கோவாவில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்

சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்

திருமணத்திற்கு பிறகு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. நாக சைதன்யாவுடன் இணைந்து படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்து வருகிறார். திறமையான நடிகையான சமந்தா, சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்கள், டான்ஸ் வீடியோக்கள், ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் ஆகியவற்றையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடியவர் சமந்தா. அப்படி அவர் பதிவிடும் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் ஆகியன வைரலாகி, லட்சக்கணக்கில் லைக்குகளை குவிக்கும். சமீபத்தில் கூட முதுகு முழுவதும் தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்த ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் சமந்தா.

 பெயரை மாற்றிய சமந்தா

பெயரை மாற்றிய சமந்தா

திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார். இந்நிலையில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை மாற்றி உள்ளார். தற்போது எஸ் என்று மட்டுமே டிஸ்பிளே பெயர் உள்ளது. அதே சமயம் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சமந்தா அக்கினேனி என்று தான் உள்ளது.

என்ன காரணமா இருக்கும்

என்ன காரணமா இருக்கும்

திடீரென டிஸ்பிளே பெயரை சமந்தா மாற்றியதற்கு எந்த காரணமும் அவர் சொல்லவில்லை. எதற்காக அவர் பெயரை மாற்றினார் என தெரியவில்லை. சமந்தாவாக விளக்கம் அளிக்கும் வரை இதற்கான காரணத்தை அறிய நாம் காத்திருக்க தான் வேண்டும்.

பரவும் வதந்திகள்

பரவும் வதந்திகள்

கணவருடன் கருத்து வேறுபாடு, கணவரை பிரியப் போகிறாரா சமந்தா, இதற்கு ஆரம்பமாக தான் தனது பெயரை மாற்றி உள்ளாரா அல்லது புதிய படத்திற்கான ப்ரோமாவுக்காக இப்படி செய்திருக்கிறாரா என பலரும் பல விதமாக கேள்விகளையும், வதந்திகளையும் முன் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X