»   »  சமந்தாவின் 'டப்பிங் ராசி' தெறியைக் கவிழ்க்குமா? காப்பாற்றுமா?

சமந்தாவின் 'டப்பிங் ராசி' தெறியைக் கவிழ்க்குமா? காப்பாற்றுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தில் நடித்து வந்த சமந்தா சமீபத்தில் தனது டப்பிங் தொடர்பான அனைத்துப் பணிகளையும் முடித்திருக்கிறார்.

தெலுங்குத் திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம்வரும் சமந்தா தமிழில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியையே சந்தித்து வருகின்றன.

இதற்கு உதாரணமாக அஞ்சான், 10 என்றதுக்குள்ள, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். இந்தத் தோல்வியிலிருந்து தப்பித்த ஒரே படம் கத்தி மட்டுமே.

இந்நிலையில் தெறி படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக நடிக்க சமந்தா அறிவித்திருக்கிறார். படத்தின் டப்பிங் பணிகளை சமந்தா முடித்தது படக்குழுவுக்கு மட்டுமே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆமாம் ஏற்கனவே சமந்தா சொந்தக்குரலில் டப்பிங் பேசிய படங்கள் நீதானே என் பொன்வசந்தம் மற்றும் 10 என்றதுக்குள்ள ஆகிய 2 படங்களுமே தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில் தெறி படத்திற்காக சமந்தா 3 வது முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். சமந்தாவின் டப்பிங் சென்டிமெண்ட்டை தெறி படம் முறியடிக்குமா? பார்க்கலாம்.

English summary
Samantha Tweeted "Dubbing over #Theri .Thankyou my amazing director Atlee_dir for a role close to my heart.So much loveJagadishbliss".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil