முதல் தென்னிந்திய நடிகை...சமந்தாவிற்கு கிடைத்த கெளரவம்
சென்னை : சமீப காலமாக மீடியாக்களால் அதிகம் பேசப்பட்ட நடிகையாக இருப்பவர் சமந்தா தான். கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாக சமந்தா அறிவிப்பதற்கு முன்பே விவாகரத்து வதந்திகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்.
விவாகரத்தை அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் தற்போது வரை ஆன்மிக சுற்றுலா, புதிய படங்கள் என பல விஷயங்களால் மீடியாக்களில் கவனிக்கப்படும் நடிகையாக இருந்து வருகிறார் சமந்தா. சமந்தா பற்றி ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டு தான் உள்ளது.

வழக்கு தொடர்ந்த சமந்தா
தன்னை பற்றி அவதூறான தகவல் பரப்பிய யூட்யூப் சேனல்கள் மீது சமந்தா வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இருந்தாலும் சமந்தாவின் விவாகரத்து தொடர்பாக பல வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன.

தோழியுடன் ஆன்மிக பயணம்
கடந்த மாதம் தனது தோழியுடன் இணைந்து கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட இடங்களுக்கு சமந்தா ஆன்மிக பயணம் செய்தார். தசரா தினத்தன்று தனது அடுத்த இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் சமந்தா. இதில் ஒன்று சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கும் படம். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. மற்றொரு படம் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கும் படமாகும்.

முதல் தென்னிந்திய நடிகை
இந்நிலையில் கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சமந்தா பேச உள்ளாராம். நவம்பர் 20 ம் தேதி துவங்கி நவம்பர் 28 ம் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகை சமந்தா தானாம்.

விரைவில் 2 பட ரிலீஸ்
சமந்தா ஏற்கனவே நடித்து முடித்துள்ள குணசேகரன் இயக்கி உள்ள சாகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.
Recommended Video

குவியும் பட வாய்ப்புக்கள்
இதற்கிடையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் உள்ளிட்ட சில பாலிவுட் படங்களில் நடிக்கவும் சமந்தாவிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளிலும் சமந்தாவிற்கு வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











