»   »  முதல் காதலரிடமே திரும்பிச் செல்லும் சமந்தா!

முதல் காதலரிடமே திரும்பிச் செல்லும் சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சமந்தா தனது முதல் காதலான நாக சைதன்யாவுடன் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

என்னாது, சமந்தாவின் முதல் காதல் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவா? எங்களுக்கு எல்லாம் தெரியாமல் போய்விட்டதே என்று நினைக்க வேண்டாம். நாக சைதன்யாவை சமந்தாவின் முதல் காதல் என்று நாங்கள் கூறவில்லை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த விஷயம் எப்பொழுது நடந்தது. யாருக்குமே தெரியாமல் போய்விட்டதே என்று யோசிக்கிறீர்களா?

கௌதம் மேனன்

கௌதம் மேனன்

கௌதம் மேனன் தான் சமந்தாவை தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அறிமுகப்படுத்தி வைத்தார். அதனாலோ என்னவோ எனக்கு பிடித்த இயக்குனர் கௌதம் சார் என்று சமந்தா அடிக்கடி கூறி வருகிறார்.

நாக சைதன்யா

நாக சைதன்யா

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும் நடித்தனர். தெலுங்கு திரை உலகில் தனக்கு முதன்முதலாக காதலனாக நடித்தவர் என்பதால் நாக சைதன்யாவை தனது முதல் காதல் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

புதுப்படம்

புதுப்படம்

கார்த்திகேயா படப் புகழ் சந்து மோன்டெட்டி இயக்கும் புதிய படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அனைவரையும் கவரும் காதல் கதையாம். அதனால் தான் இயக்குனர் ஏற்கனவே மக்கள் ஏற்றுக் கொண்ட ஜோடியான சைதன்யா, சமந்தாவை நடிக்க வைக்க உள்ளார்.

சமந்தா

சமந்தா

சமந்தா நடித்த சன் ஆப் சத்யமூர்த்தி தெலுங்கு படம் அண்மையில் ரிலீஸானது. அவர் தற்போது தெலுங்கு தவிர தமிழ் படங்களிலும் பிசியாக உள்ளார். சமந்தா தற்போது 2 தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஒரு படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

    English summary
    Samantha and Naga Chaitanya are undoubtedly one of the most adorable on-screen couples. Talking in a recent interview, she has even referred Naga Chaitanya as her first love. Apparently, according to the industry sources, she is going to team up with her so called first love, Naga Chaitanya, for a film.
    Please Wait while comments are loading...