உள்ளாடையுடன் உச்சகட்ட கவர்ச்சி.. இப்படியா மிரட்டுவீங்க சமந்தா.. பாலிவுட் நடிகைகளே மிரண்டுட்டாங்க!

சென்னை: பிரபல ஃபேஷன் நிறுவனத்தின் விளம்பரத்துக்காக கருப்பு நிற பிராவுடன் கவர்ச்சியின் உச்சமாக சமந்தா கொடுத்த ஹாட் போஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

#Samantha என்ற ஹாஷ்டேக்கை நடிகை சமந்தாவின் ரசிகர்கள் இந்தியளவில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா, நடிகை ஹன்சிகா உள்ளிட்ட பலர் சமந்தாவின் இந்த புகைப்படங்களை பார்த்து வாயடைத்துப் போயுள்ளனர்.

ஃபேமிலி மேன் புகழ்

ஃபேமிலி மேன் புகழ்

தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் படு போல்டாக ராஜி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தொடர்ந்து பிரபல பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவராகவும் மாடலாகவும் நடித்து அசத்தி வருகிறார். தி ஃபேமிலி மேன் வெப் தொடரை தொடர்ந்து இந்தியில் வெளியான புஷ்பா படத்திலும் சமந்தா போட்ட ஆட்டம் அங்கே ஏகப்பட்ட ரசிகர்களை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

உள்ளாடையுடன் உச்சகட்ட போஸ்

உள்ளாடையுடன் உச்சகட்ட போஸ்

கருப்பு நிற உள்ளாடையுடன் கண்கள் கூசும் கவர்ச்சியில் உச்சகட்ட போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு ஏற்றி உள்ளார் நடிகை சமந்தா. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலில் அத்தனை கவர்ச்சி காட்டி அவர் போட்ட குத்தாட்டத்தில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், தொடர்ந்து தாராளமாக ஸ்கின் ஷோ காட்டி வருகிறார்.

ஃபயர் விடும் பிரபலங்கள்

ஃபயர் விடும் பிரபலங்கள்

சமந்தாவை இப்படியொரு உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் பார்த்த சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பாலிவுட் நடிகைகள் மற்றும் பலர் அவரது புகைப்படத்திற்கு ஃபயர் விட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். கடைசியாக சரக்கு விளம்பரத்திற்கும் செம ஹாட்டாக போஸ் கொடுத்து பிபியை எகிற வைத்திருந்தார் சமந்தா.

ஹாட்டீ போட்ட அனுஷ்கா

ஹாட்டீ போட்ட அனுஷ்கா

பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சமந்தாவின் இந்த போட்டோக்களை பார்த்து வாயடைத்துப் போயுள்ளார். சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டீ என கேப்ஷன் போட்டு பாராட்டி உள்ளார். நடிகை ஹன்சிகா உள்ளிட்ட பலர் செம ஸ்டன்னிங், கார்ஜியஸ், செக்ஸி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி 67

தளபதி 67

சமீபத்தில் சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தெலுங்கில் சகுந்தலம், யசோதா மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X