»   »  சமந்தாவின் நல்ல மனசு 70 இதயங்களை இயங்க வச்சிருக்கு!

சமந்தாவின் நல்ல மனசு 70 இதயங்களை இயங்க வச்சிருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய நடிகைகளில் சிலர் நிஜமாகவே கஷ்டப்படுவோரைக் கண்டறிந்து, மனப்பூர்வமாக உதவி செய்வது ஆச்சர்யமாக உள்ளது.

ஹன்சிகா செய்யும் கல்வி உதவிகள், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் பணிகள் எல்லோருக்கும் தெரிந்தது.

சமந்தாவின் உதவிகள்

சமந்தாவின் உதவிகள்

இப்போது சமந்தாவும் தன் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிடும் பணியில் இறங்கியுள்ளார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்த பெண் என்பதால், இப்போது நன்றாக சம்பாதிக்கும் காலத்தில் இல்லாதவர்களுக்கு வழங்குவோம் என்ற நோக்கத்துடன் உதவிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளார்.

70 பேருக்கு

70 பேருக்கு

சமீபத்தில் அவர் ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் உதவி வருகிறார்.

இதுவரை 70 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்கான முழு செலவையும் சமந்தாவின் இந்த அறக்கட்டளை செய்துள்ளது.

சொந்தப் பணம்

சொந்தப் பணம்

"இந்தப் பணம் முழுக்க முழுக்க என் வருமானத்தில் வந்த சொந்தப் பணம். இப்போது 70 பேருக்கு உதவியுள்ளேன். உண்மையிலேயே உதவி தேவைப்படுவோருக்கு மேலும் கூட உதவப் போகிறேன்," எனும் சமந்தா, கல்வி உதவி தேவைப்படுவோருக்கும் உதவப் போகிறாராம்.

அடுத்து..?

அடுத்து..?

சமந்தா நடித்த தெறி படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அடுத்து அவரது 24 படம் வெளியாகிறது. இதில் அவர் சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.

அடுத்து வட சென்னையில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

    English summary
    Samantha has extended her helping hands to 70 poor hearts (surgery) through her Prathiyusha Foundation.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil