»   »  ஒரே நேரத்தில் எல்லோரும் கேட்டா எப்படி? சிக்கித் தவிக்கும் சமந்தா!!

ஒரே நேரத்தில் எல்லோரும் கேட்டா எப்படி? சிக்கித் தவிக்கும் சமந்தா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் இப்போது நயன்தாராவுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த ஜனவரியிலேயே தொடங்கியிருக்க வேண்டியது.

வேலைக்காரன் படம் தாமதமானதால் இந்த படமும் தாமதமாகி விட்டது. இப்போது மே மாதம் தொடங்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். மே மாதம் என்றால் சமந்தா கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படம், விஷாலின் இரும்புத்திரை படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் இரும்புத்திரை படத்துக்கும் மே மாதத்தில்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

Samantha is in trouble

இவை தவிர இரண்டு தெலுங்கு படங்கள் வேறு இருக்கின்றன. ஒரே நேரத்தில் எல்லோரும் கால்ஷீட் கேட்பதால் கால்ஷீட் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம்.

கல்யாண ராசியோ என்னவோ திருமணம் நெருங்க நெருங்க சமந்தாவுக்கு புது படங்கள், பெரிய ஹீரோக்கள் கமபினேஷன் என மாட்டுகிறது. இதன் காரணமாகவே திருமணத்தை கூட தள்ளிப்போட்டுவிட்டார் சமந்தா.

நாகசைதன்யா பொறுமைக்கு எல்லை அதிகம் போல...!

English summary
Actress Samantha is suffering in call sheet dates issue, as big banners and heroes seeking her.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil