»   »  வந்துட்டேன்னு சொல்லு நானும் வந்துட்டேன்னு சொல்லு: சமந்தா

வந்துட்டேன்னு சொல்லு நானும் வந்துட்டேன்னு சொல்லு: சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சமந்தா தீபாவளி அன்று இன்ஸ்டாகிராமில் சேர்ந்துள்ளார்.

சமந்தா விஷாலின் இரும்புத் திரை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Samantha joins instagram

திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரப் போவதாக சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். அதில் புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தீபாவளி அன்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட உதவும் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளார். கணக்கு துவங்கிய கையோடு தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

நான் ரொம்பவே லேட்டு என்று தெரியும். ஆனாலும் நானும் வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Actress Samantha has joined Instagram on Diwali. She shared a beautiful picture of hers on instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil