»   »  50 "கேஜி" தாஜ்மகால் 100 "கேஜி" வெயிட் தூக்குகிறதே... அடடே!

50 "கேஜி" தாஜ்மகால் 100 "கேஜி" வெயிட் தூக்குகிறதே... அடடே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சமந்தா 100 கிலோ எடையைத் தூக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

விஜய்யுடன் ‘தெறி,' சூர்யாவுடன் ‘24' என தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார் சமந்தா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் 100 கிலோ எடையைத் தூக்குவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது.

100கி எடை...

100கி எடை...

அதுவும் ஒருமுறை அல்ல, மூன்று முறை 100 கிலோ எடையைத் தூக்குகிறார் சமந்தா. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்ப அதிர்ச்சி...

இன்ப அதிர்ச்சி...

இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சமந்தாவின் எடையே 50 கிலோ தான். அவரால் எப்படி 100 கிலோ எடையை தூக்க முடிந்தது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் வியப்பினை பதிவு செய்திருந்தனர்.

பெண்கள் நினைத்தால்...

பெண்கள் நினைத்தால்...

இது குறித்து சமந்தா கூறுகையில், ‘‘பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்'' என தன்னம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார்.

கனவிலும் நினைக்கவில்லை...

கனவிலும் நினைக்கவில்லை...

மேலும், ‘‘நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயர்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஹீரோக்களே காரணம்...

ஹீரோக்களே காரணம்...

இந்த வளர்ச்சிக்கு நான் காரணம் இல்லை. என்னோடு நடித்த கதாநாயகர்களே காரணம் என்பேன். தமிழ், தெலுங்கு படங்களில் பிரபலமான கதாநாயகர்களோடு நடிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன.

டைரக்டர்களும் தான்...

டைரக்டர்களும் தான்...

அந்த படங்கள் வெற்றிகரமாக ஓடியதால் ரசிகர்களை எளிதாக சென்று அடைந்தேன். என்னை வைத்து படம் எடுத்த டைரக்டர்களும் என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கிறார்கள்.

போராட்டம்...

போராட்டம்...

தொடர்ந்து எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை தக்க வைக்க போராடுகிறேன்.

சினிமாவில் மட்டுமே கவனம்...

சினிமாவில் மட்டுமே கவனம்...

எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை'' என சமந்தா தெரிவித்துள்ளார்.

இரும்புப் பெண்மணி...

சமந்தாவின் இந்த எடை தூக்கும் வீடியோவை இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, சமந்தாவை ரசிகர்கள் இரும்புப் பெண்மணி எனவும் செல்லமாக அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

English summary
Trending online, with over 23,34,298 views (at the time of print) is a video which has the actress Samantha doing a ‘deadlift’ a weight-training exercise where you lift a loaded barbell off the ground to the hips, then lower it back to the ground from a standing position. She lifted an epic ( 102.25 kilos almost double her body weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil