புஷ்பா 2விலும் சமந்தா குத்தாட்டம் போடப்போறாராம்.. அப்போ வேறலெவல் பார்ட்டி டான்ஸ் இருக்கப் போகுது!

சென்னை: புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் புஷ்பா 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா தி ரைஸ் படத்தில் நடிகை சமந்தா "ஓ சொல்றியா மாமா" பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் பாகத்திலும் சமந்தா மீண்டும் ஒரு குத்தாட்டம் போடப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவர்ச்சி நடனம்

கவர்ச்சி நடனம்

நடிகை சமந்தா ஹீரோயினாக ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். ஆனால், முதன்முறையாக புஷ்பா படத்தில் தான் ஐட்டம் டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். புஷ்பா தி ரைஸ் படத்தில் மங்களம் சீனு நடத்தும் பார்ட்டியில் "ஓ சொல்றியா மாமா" பாடலுக்கு நடனமாடி இருந்தார் சமந்தா.

புஷ்பா 2விலும்

புஷ்பா 2விலும்

புஷ்பா தி ரூல் படத்தில் மங்களம் சீனுவுக்கு பதிலாக புஷ்பா நடத்தும் அந்த பிரம்மாண்ட பார்ட்டி நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடிகை சமந்தாவையே ஆட வைக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் சுகுமார். ஓ சொல்றியா மாமா மற்றும் புஷ்பா 2 படத்தில் வரும் குத்தாட்ட பாடல் என இரண்டுக்குமே சேர்த்து நடிகை சமந்தாவுக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிளைமேக்ஸ் பாட்டு

கிளைமேக்ஸ் பாட்டு

பகத் ஃபாசில் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்கும் இடையே நடைபெற உள்ள மிகப்பெரிய ஈகோ கிளாஷ் தான் புஷ்பா தி ரூல் படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பாவின் சாம்ராஜ்யாம் வளர்வதும், அதை தகர்க்க பன்வர் சிங் செய்யும் சூழ்ச்சிகள் என முதல் பாகத்தை விட மிரட்டலாக உருவாகி வரும் இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸில் சமந்தா நடனமாடும் அந்த குத்துப் பாடல் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் ஷூட்டிங்

விரைவில் ஷூட்டிங்

வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்திற்குள் புஷ்பா 2 படத்திற்காக சமந்தா நடனம் ஆடும் பாடல் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். அதே போல இந்தி வெர்ஷனுக்கு பாலிவுட் நடிகை யாரையாவது நடனமாட வைக்கலாமா? அல்லது சமந்தாவின் ரீச்சே பாலிவுட் வரை சென்றிருப்பதால் அப்படியே விட்டு விடலாமா என்கிற விவாதத்தில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

50 கோடி சம்பளம்

50 கோடி சம்பளம்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா திரைப்படத்தில் 35 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், அந்த படம் 350 கோடி ரூபாய் வசூல் செய்து அபார சாதனை படைத்தது. இந்நிலையில், புஷ்பா 2 வில் அல்லு அர்ஜுனுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல ராஷ்மிகாவின் சம்பளம் இரட்டிப்பாகவும், இயக்குநர் சுகுமாரின் சம்பளம் 3 மடங்காகவும் மாறியுள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X