நயன்தாராவை தொடர்ந்து அம்மன் அவதாரம் எடுத்த தமன்னா.. வைரலாகும் புகைப்படங்கள்.. லைக் போட்ட சமந்தா!

சென்னை: அம்மன் கெட்டப்பில் தலையில் கிரீடம் எல்லாம் வைத்திருக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தமன்னா எந்த படத்தில் அம்மனாக நடிக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அம்மன் அவதாரம்

அம்மன் அவதாரம்

தமிழ் சினிமாவில் கே.ஆர். விஜயா, ஜெயலலிதா என அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஏராளமான நடிகைகள் அம்மனாக நடித்துள்ளனர். அம்மன் படத்தில் அம்மன் அவதாரம் எடுத்து மிரட்டிய ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார். மீனா, ரோஜா உள்ளிட்ட நடிகைகளும் அம்மன் அவதாரம் எடுத்துள்ளனர்.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

கடந்த ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்து அசத்தி இருந்தார். நயன்தாராவை தொடர்ந்து மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிகைகள் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை தமன்னா அப்படியொரு வேடத்தில் காட்சி அளித்துள்ளார்.

அம்மனாக தமன்னா

அம்மனாக தமன்னா

உணவு விடுதியில் அம்மன் அவதாரத்தில் உணவு உண்ணும் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை தமன்னா. திடீரென தமன்னா ஏன் இப்படி மாறி உள்ளார் என்றும் எந்த படத்திற்கான கெட்டப் இது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாழை இலையில் உணவு

வாழை இலையில் உணவு

வாழை இலையில் உணவு உண்ணும் போது நான் என்னை கடவுளாக உணர்கிறேன் என நடிகை தமன்னா வாழை இலைக்கு விளம்பரம் செய்வதை பார்த்த ரசிகர்கள் ஏதாவது விளம்பர படமாக இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை தமன்னாவின் இந்த புகைப்படத்தை பார்த்த சக நடிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Recommended Video

Tamannaah Bhatia boredom Video | Exercise, Cooking, Trend Setting • MPL Gaming App
சமந்தா கமெண்ட்

சமந்தா கமெண்ட்

தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன. நடிகை வித்யூராமன் அன்னபூரணி என்றும் இஷா குப்தா நீங்க ஒரு கடவுள் என்றும் கமெண்ட் செய்ய நடிகை சமந்தா ஹார்ட்டீன் போட்டு தமன்னாவுக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X