twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ருதியால் தெலுங்கு பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா

    By Siva
    |

    ஹைதராபாத்: தெலுங்கு பிரேமத்தில் ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்ததால் சமந்தாவை எடுக்கவில்லை என இயக்குநர் சந்து மொன்டேட்டி தெரிவித்துள்ளார்..

    மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமத்தை சந்து மொன்டேட்டி தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதி ஹாஸனை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டார். மலர் டீச்சராக நடித்த ஸ்ருதியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்தனர். அவர்கள் கலாய்த்தாலும் படம் ஹிட்டாகியுள்ளது.

    இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் சந்து கூறுகையில்,

    ஸ்ருதி

    ஸ்ருதி

    பிரேமம் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தவுடன் மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்கு ஸ்டார் ஹீரோயின் வேண்டும் என நினைத்து ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்தோம்.

    சமந்தா

    சமந்தா

    சிந்து கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்க நினைத்தோம். ஆனால் ஏற்கனவே ஒரு ஸ்டார் ஹீரோயினை ஒப்பந்தம் செய்ததால் சிந்து கதாபாத்திரத்திற்கு மற்றொரு ஸ்டார் ஹீரோயினான சமந்தாவை ஒப்பந்தம் செய்யவில்லை.

    மடோனா

    மடோனா

    சிந்து கதாபாத்திரத்திற்கு மடோனாவையே எடுப்பது தான் சரி என தோன்றியது. அதனால் அவரையே தெலுங்கிலும் சிந்துவாக நடிக்க வைத்தோம். நான் மலையாள பிரேமம் படம் ரிலீஸான அன்றே ஹைதராபாத்தில் பார்த்தேன்.

    பிரேமம்

    பிரேமம்

    பிரேமம் படத்தை பார்த்த உடனேயே பிடித்துவிட்டது. ஆனால் அதை ரீமேக் செய்வேன் என நினைக்கவில்லை. பிரேமத்தில் கதை இல்லை. அது உணர்ச்சிகளை பற்றியது. அதனால் அதை ரீமேக் செய்ய முடியுமா என்ற தயங்கினேன்.

    English summary
    Director Chandoo Mondeti who remade Premam in Telugu said that he didn't cast Samantha as star heroine Shruti Haasan was already on board.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X