»   »  இதுவரை கவர்ச்சியில் உறைய வைத்த சமந்தா, இனி சிரிக்க வைத்து ‘கிச்சு கிச்சு’ மூட்டப் போகிறார்!

இதுவரை கவர்ச்சியில் உறைய வைத்த சமந்தா, இனி சிரிக்க வைத்து ‘கிச்சு கிச்சு’ மூட்டப் போகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் '24' படத்தில், சமந்தாவிற்கு நகைச்சுவையான கதாபாத்திரமாம்.

லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தனது 2டி நிறுவனம் மூலமாக சூர்யாவே இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.

சமந்தா...

சமந்தா...

இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி அஞ்சானில் இணைந்து நடித்திருந்தனர்.

சமந்தா கேரக்டர்...

சமந்தா கேரக்டர்...

மற்ற படங்களைப் போல ஹீரோவுடன் டூயட் பாடினோம் என்று மட்டும் இல்லாமல், இப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் பேசப்படும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளதாம்.

சிரிச்சு... சிரிச்சு...

சிரிச்சு... சிரிச்சு...

அதிலும் குறிப்பாக சமந்தாவின் கதாபாத்திரம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என படக்குழுவினர் உத்திரவாதம் தருகின்றனர்.

வித்தியாசமான கதாபாத்திரம்...

வித்தியாசமான கதாபாத்திரம்...

இதுவரை அழகு பதுமையாக, உணர்ச்சி பூர்வ கதாபாத்திரத்தில் மட்டுமே தமிழில் நடித்துள்ள சமந்தாவுக்கு இப்படம் வித்தியாசமான ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

  English summary
  We already reported that Surya‬’s next movie after Venkat Prabhu’s Masss has been titled as 24. Now the latest news about the movie is that Samantha will be pairing up with Surya once again after Anjaan.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil