»   »  நாக சைதன்யாவின் அம்மாவை சந்தித்த சமந்தா... ஆந்திராவில் கெட்டி மேளச் சத்தம்!

நாக சைதன்யாவின் அம்மாவை சந்தித்த சமந்தா... ஆந்திராவில் கெட்டி மேளச் சத்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருமண கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி சமந்தாவின் வீட்டிற்கு சென்று ஒரு நாள் முழுவதும் சமந்தாவுடன் இருந்துள்ளார். சமந்தாவிடம் பேசிய லட்சுமிக்கு மருமகளின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு சமந்தா அளித்த பேட்டியில், தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன் என்று கூறியிருந்தார்.

திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று கூறியிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்தப் பேட்டி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா விளக்கம் அளித்தார் அதில், நான் சொல்லும்வரை திருமணம் பற்றிய பேச்சே கிடையாது என்று பதிவிட்டிருந்தார்.

சமந்தாவின் காதலர்

சமந்தாவின் காதலர்

காதலரைப் பற்றிய தகவலை சமந்தா மூடி மறைத்தாலும், பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன், நாக சைதன்யா தான் சமந்தாவின் காதலர் என்று சொல்லப்படுகிறது. இவர் நாகர்ஜூனாவின் முதல் மனைவி லட்சுமிக்கு பிறந்த மகனாவார். லட்சுமியை விவாகரத்து செய்து விட்டு அமலாவை திருமண செய்த பின்னரும் தந்தையுடனே வசித்து வருகிறார் நாக சைதன்யா.

சமந்தா - நாக சைதன்யா

சமந்தா - நாக சைதன்யா

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். விரைவில் இருவரும் திருமணம் பற்றிய தகவலை வெளியிடுவார்கள் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரவும் கிசு கிசு

பரவும் கிசு கிசு

சமந்தா காதலிப்பது நாகார்ஜுன் மகன் நாக சைதன்யாவை என்று ஆந்திரா, தெலுங்கானாவில் டமாரமடித்து அறிவித்துவிட்டனர். ஆனாலும், சம்பந்தப்பட்ட இருவரும் பதிலளிக்காமல் சைலண்ட் மோடில் இருந்தனர்.

உறுதியான காதல்

உறுதியான காதல்

சமந்தாவும், நாகசைதன்யாவும் காதலை ஒத்துக் கொள்ளாவிட்டால் என்ன, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது நூறுசதம் உறுதி என்கின்றன ஆந்திரா ஊடகங்கள். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சமந்தாவின் காதல் பற்றி ஆந்திரா, தெலுங்கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

உலா வரும் ஜோடி

உலா வரும் ஜோடி

சமந்தா நடித்த, அ ஆ படம் சமீபத்தில் வெளியானது. அதனை சமந்தாவுடன் சேர்ந்து கண்டு களித்தார் நாக சைதன்யா. மேலும், வேறு சில இடங்களிலும் இந்த ஜோடியை ஒன்றாகப் பார்த்தவர்கள் ஊடகங்களுக்கு செய்தியை கொளுத்தி போட்டு வருகின்றனர்.

விரைவில் டும் டும் டும்

விரைவில் டும் டும் டும்

திருமண கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நாக சைதன்யாவின் அம்மா லட்சுமி சமந்தாவின் வீட்டிற்கு சென்று ஒரு நாள் முழுவதும் சமந்தாவுடன் இருந்துள்ளார். சமந்தாவிடம் பேசிய லட்சுமிக்கு மருமகளின் நடவடிக்கைகள் பிடித்துப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திருமணத்தை நோக்கிய பயணத்தில் சமந்தா இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.

English summary
Samantha Ruth Prabhu might be paired up with Akkineni Naga Chaitanya in real life. The latest buzz, the actress recently met Naga Chaitanya’s mother who is her future mother-in-law.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil