»   »  திருமணத்திற்கு முன்பே காதலருடன் சேர்ந்து வசிக்கும் சமந்தா?

திருமணத்திற்கு முன்பே காதலருடன் சேர்ந்து வசிக்கும் சமந்தா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது காதலர் நாக சைதன்யாவுடன், நடிகை சமந்தா ஒரே வீட்டில் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் தான் ஒருவரைக் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றும் கூறியிருந்தார்.

சமந்தா காதலிப்பது டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவைத் தான் என்று கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இந்த வருட இறுதியில் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Samantha and Naga Chaitanya live-in relationship

இந்நிலையில் நாக சைதன்யா வசிக்கும் அபார்ட்மெண்ட்டில் சமந்தாவும் வசித்து வருவதாகக் கூறுகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்களாம்.

இதனை உறுதி செய்வதுபோல இருவரும் வீட்டின் வெளியில் நின்று பேசிக் கொண்டிருப்பது போன்ற, வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதற்கு ஆதாரமாக இதுநாள்வரை ஹைதராபாத் பார்க் ஹையாத் ஹோட்டலில் வசித்து வந்த சமந்தா, தற்போது நாக சைதன்யா வசிக்கும் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குமிடத்தை மாற்றிக் கொண்டு விட்டதைக் கூறுகின்றனர்.

பாலிவுட்டில் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் இருவரும் இதேபோல ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Actress Samantha and Naga Chaitanya live-in relationship in Naga Chaitanya's House.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil