»   »  நாகார்ஜுனா குடும்பத்தினரின் 'அதிருப்தி'யால் புதிய வாய்ப்புகளைத் தேடும் சமந்தா?

நாகார்ஜுனா குடும்பத்தினரின் 'அதிருப்தி'யால் புதிய வாய்ப்புகளைத் தேடும் சமந்தா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருமணத்தால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக கூறிய சமந்தா தற்போது புதிய வாய்ப்புகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகையான சமந்தா காதலில் விழுந்தது, அவரது திருமணம் இரண்டும் தான் டோலிவுட்டின் ஹாட் நியூஸ்.

சமந்தா- நாக சைதன்யா பற்றிய செய்தி இல்லாமல் தினசரி நாளிதழ்கள் வெளியாவதில்லை என்று சொல்லும் அளவிற்கு இவர்களைப் பற்றி எழுதாத பத்திரிகைகளே கிடையாது.

இந்நிலையில் திடீரென்று சமந்தா புதிய பட வாய்ப்புகளைத் தேடி வருவதாக செய்திகள் அடிபட்டு வருகின்றன.

சமந்தா-நாக சைதன்யா

சமந்தா-நாக சைதன்யா

சித்தார்த்துடனான காதல் முறிவிற்குப் பின் 'சோலோ'வாக வலம்வந்த சமந்தா தான் ஒருவரை காதலிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து வெளியான கிசுகிசுக்கள் அது நாக சைதன்யா தான் என்பதை உறுதி செய்தன.

திருமணம்

திருமணம்

நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனாவும் மகன்கள் காதலிப்பது மகிழ்ச்சிதான் என்று கூறி காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார். நாகார்ஜுனாவின் முன்னாள் மனைவியும், நாக சைதன்யாவின் அம்மாவுமான லட்சுமியும் மகனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

வட சென்னை

வட சென்னை

இந்த வருடமே திருமணத் தேதியை அறிவிக்க இருப்பதாக நாகார்ஜுனா தரப்பில் செய்திகள் வெளியாகியது. இதற்கு வசதியாக சமந்தா வேறு புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் தவிர்க்க ஆரம்பித்தார். இதனால் தான் தனுஷின் 'வட சென்னை' படத்திலிருந்து கூட சமந்தா விலகியதாக கூறப்பட்டது.

அதிருப்தி

அதிருப்தி

இந்நிலையில் சமந்தா அடுத்த வருடம் வரை தான் தனியாக இருக்கப் போவதாகக் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சமந்தா மருமகளாக வருவதில் திருப்தி இல்லை என்றும், அதனால் தான் சமந்தா இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

திருமணம்

திருமணம்

இதனால் சமந்தா-நாக சைதன்யா திருமணம் நடைபெறுமா? என்ற மிகப்பெரிய கேள்வி டோலிவுட்டில் எழுந்துள்ளது. ஆனால் இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய சமந்தா புதிய வாய்ப்புகளைத் தேடுவதில் கவனம் செலுத்த, நாக சைதன்யாவோ தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

English summary
Sources said Samantha Has decided Signing new Films.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil