Don't Miss!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- News
காட்டில் கிடந்த 12 வயது சிறுமி உடல்.. விசாரிக்க போன போலீசுக்கு ஷாக்.. திணற வைத்த சிறுவன்.. பகீர்
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Technology
அடுத்த ஆப்பு.. அதிக காசு கொடுத்தால் அதிக நன்மை! Elon Musk ஓபன்! ஷாக் ஆன ட்விட்டர் பயனர்கள்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
கடவுள் தான் காப்பாத்தணும்.. ஆன்மிக பாதையில் சமந்தா.. கையில் எப்போதும் ஜெபமாலை.. என்ன விஷயம்?
சென்னை: நடிகை சமந்தா தனது கையில் எப்போதும் ஜெபமாலையை வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
தென்னிந்தியாவில் டாப் நடிகையாக கலக்கிய நடிகை சமந்தா பான் இந்தியா நடிகையாக அசத்த நினைத்த நிலையில் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
எழுந்து கூட இனிமேல் சமந்தாவால் நடக்க முடியாது என பலரும் கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் எழுந்து சிங்கப்பெண்ணாக நடந்து மும்பையில் புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார் சமந்தா.
''இதுவும்
கடந்து
போகும்''சாகுந்தலம்
டிரைலர்
வெளியீட்டு
விழாவில்
கண்கலங்கிய
சமந்தா..பதறிய
ஃபேன்ஸ்!

சமந்தா கண்ணீர்
யசோதா
படத்தின்
ப்ரமோஷனுக்காக
பேட்டியளித்த
நடிகை
சமந்தா
கண்ணீர்
விட்டு
பேசியது
பலரையும்
கண்
கலங்க
செய்தது.
அந்த
படம்
வசூல்
ரீதியாக
50
கோடிக்கும்
அதிகமாக
வசூல்
செய்து
வெற்றி
பெற்றது.
இந்நிலையில்,
தனது
அடுத்த
ரிலீஸான
சகுந்தலம்
படத்தின்
ப்ரமோஷன்
நிகழ்ச்சியில்
சமீபத்தில்
கலந்து
கொண்ட
நடிகை
சமந்தா
தன்னை
அறியாமல்
கண்
கலங்கியது
ரசிகர்களை
ரொம்பவே
சோகத்தில்
ஆழ்த்தி
உள்ளது.

கையில் ஜெபமாலை
அந்த விழாவில் கண்ணாடி அணிந்து கொண்டு உடல் நலம் குன்றியவராக காணப்பட்ட நடிகை சமந்தாவின் கைகளில் இருந்த ஜெபமாலை அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சபரி மலை ஐயப்பனுக்கும் அணிவிக்கப்படும் ஜெபமாலையை நடிகை சமந்தா எப்போதும் தனது கைகளில் வைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிறிஸ்தவராக இருந்தாலும்
நடிகை சமந்தா ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து மதத்தையும் அதிகம் நேசித்து வந்தார். ஜக்கி வாசுதேவ் நடத்திய மகாசிவராத்திரி விழாக்களில் எல்லாம் சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், உடல் நலத்தில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தீவிர பக்திமானாக மாறி உள்ளார் சமந்தா என்றே கூறுகின்றனர்.

ஆன்மிக பாதையில்
மயோசிடிஸ் நோயில் இருந்து குணமாகி வரும் நடிகை சமந்தா அதற்காக கேரளாவில் தான் ஆயுர்வேத சிகிச்சைகளை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சபரி மலைக்கு பக்தர்கள் மாலை அணிவது பற்றி அறிந்து கொண்ட அவர், தனது கைகளில் ஜெபமாலையை வைத்துக் கொண்டு எப்போதும் இறை வழிபாடு செய்து வருகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சகுந்தலம்
அதுமட்டுமின்றி யசோதா, சகுந்தலம் என இந்து மதத்தை சார்ந்த கதைகளையும் தொடர்ந்து தேர்வு செய்து நடிகை சமந்தா நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. கிருஷ்ணரை வளர்த்த அன்னையின் பெயர் யசோதா என அந்த படத்திலே வசனம் இடம்பெற்றிருக்கும். சகுந்தலாவும் இந்து மதத்தை தழுவிய கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது.