Don't Miss!
- News
நடிகர் ரஜினியின் போட்டோ, பெயரை பயன்படுத்த தடை.. மீறினால் குற்ற நடவடிக்கை.. அறிவிப்பின் பரபர பின்னணி
- Finance
வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு.. ஜனவரி 30 -31 வங்கி சேவைகள் பாதிக்காது..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மீண்டும் பெயரை மாற்றிய சமந்தா... சோகத்தில் ரசிகர்கள்
சென்னை : தென்னிந்திய சினிமாவின் அழகான காதல் தம்பதி என்றால் அது சமந்தா - நாக சைதன்யா ஜோடி தான். கடந்த 3 மாதங்களாக இவர்களின் விவாகரத்து பற்றிய தகவல்கள் தான் மீடியாக்களின் அதிகம் பேசப்பட்டு வந்தது.
2017 ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி கோவாவில் மிக பிரம்மாண்டமாக சமந்தா - நாக சைதன்யாவின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றினார் சமந்தா. இந்நிலையில் ஜுலை மாதம் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரின் பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கினார் சமந்தா.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற மொத்த போட்டியாளர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் இதோ!

பெயரை மாற்றிய சமந்தா
சிம்பிளாக எஸ் என்று மட்டும் டிஸ்பிளே பெயரை மாற்றினார். இதையடுத்து சமந்தா, அவரது கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாக தகவல் வெளியானது. இவர்களின் விவாகரத்து பற்றி பல தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அது பற்றி இருவரின் தரப்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

பிரிவை அறிவித்த தம்பதி
இந்நிலையில் அக்டோபர் 1 ம் தேதி தாங்கள் பிரிய போவதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் முறைப்படி அறிவித்தனர். விவாகரத்து பற்றிய தகவல்கள் பொய்யாக தான் இருக்கும் என ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நான்காம் ஆண்டு திருமணம் நாள் கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவர்கள் பிரிவை அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மீண்டும் பெயர் மாற்றம்
முறையாக பிரிவை அறிவித்ததால் அக்கினேனி குடும்பத்தில் இருந்து முறைப்படி வெளியேறினார் சமந்தா. இதனால் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் சமந்தா. எஸ் என இருந்த பெயரை, திருமணத்திற்கு முன்பு இருந்ததை போல் சமந்தா ருத் பிரபு என மாற்றிக் கொண்டுள்ளார் சமந்தா.

அடுத்த வதந்தி
இதற்கிடையில் விவாகரத்து வதந்தி முடிந்த நிலையில், ஜீவனாம்சமாக சமந்தா ரூ.200 கோடியை வாங்க மறுத்ததாக மற்றொரு தகவல் பரவி வருகிறது. அதோடு சமந்தா, நாக சைதன்யாவின் பிரிவிற்கு என்ன காரணம், யார் காரணம் என்ற வதந்திகள் வேகமாக பரவ துவங்கி விட்டது. இதனால் சமந்தாவின் தீவிர ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

மீண்டும் படங்களில் நடிப்பாரா
சமந்தா தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். நாக சைதன்யாவும் தெலுங்கில் லவ் ஸ்டோரி படத்தில் நடித்து முடித்துள்ளார். விவாகரத்து காரணமாக தான் சமீபத்தில் பிரேக் அறிவித்தார் சமந்தா. பிறகு மீண்டும் தெலுங்கு படங்கள் சிலவற்றில் நடிக்க சமந்தாவிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

குழப்பத்தில் சமந்தா
ஆனால் தற்போதுள்ள சூழலில் அவர் உடனடியாக அடுத்த படங்களில் ஒப்புக் கொண்டு நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. அடுத்த படங்களில் சமந்தா உடனடியாக நடிப்பதை சிறிது காலம் ஒத்திவைப்பார் என்றே கூறப்படுகிறது.