»   »  ஒரு ஆயிரம் ரூபாய்க்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன் தெரியுமா?: சமந்தா

ஒரு ஆயிரம் ரூபாய்க்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன் தெரியுமா?: சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு ஆயிரம் ரூபாய்க்கு தான் பட்ட கஷ்டத்தை உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா.

டோலிவுட் கொண்டாடும் நாயகியாக இருந்த சமந்தா மெல்ல மெல்ல கோலிவுட்டிலும் முன்னணி நடிகையாகிவிட்டார். அட்லீ இயக்கத்தில் அவர் இளைய தளபதி விஜய்யுடன் நடித்த தெறி படம் ஹிட்டானது.

படத்தில் சமந்தாவின் நடிப்பு பாராட்டை பெற்றது. இந்நிலையில் தான் கடந்து வந்த பாதை பற்றி சமந்தா கூறுகையில்,

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

நாம் என்ன தான் உழைத்து பெரிய ஆளாக ஆனாலும் நாம் கடந்த வந்த பாதையை மட்டும் மறந்துவிடக் கூடாது. கஷ்டப்படும் போது ஏற்பட்ட அனுபவங்கள் விலை மதிக்க முடியாத பாடங்களை கற்றுத்தரும். அதை நாம் அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும்.

கஷ்டம்

கஷ்டம்

நான் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உள்ளேன். ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாய்க்காக கால் கடுக்க மூன்று மணிநேரம் எல்லாம் நின்றிருக்கிறேன்.

பணம்

பணம்

14 வயதில் இருந்தே என் தேவைக்கான பணத்தை சம்பாதிக்கத் துவங்கினேன். என் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டேன். அதனால் சிறு சிறு வேலைகள் செய்து என் தேவைக்கான பணத்தை சம்பாதித்தேன்.

ரூ. 1000

ரூ. 1000

திருமணம் நடக்கும்போது மண்டப வாசலில் நின்று இளம்பெண்கள் விருந்தினர் மீது பன்னீர் தெளிப்பது உண்டு. நான் பன்னீர் தெளிக்கும் பணியை செய்திருக்கிறேன். மூன்று மணிநேரம் கால் கடுக்க நின்று பன்னீர் தெளித்தால் ரூ.1000 கொடுப்பார்கள்.

கிக்

கிக்

தற்போது தான் அதிகம் சம்பாதிக்கிறேன். இருப்பினும் திருமண மண்டப வாசலில் நின்று பன்னீர் தெளித்து சம்பாதித்த போது இருந்த கிக் இல்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Samantha said that once she used to stand for three hours just to earn Rs. 1,000.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil