சமந்தாவுக்கு விவாகரத்து ஆனபோது கொண்டாடியது யார்?.. இப்படியும் இருக்காங்களா?.. ரொம்ப ஃபீல் பண்றாங்க

சென்னை: நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் மட்டுமே நீடித்த அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. சமந்தாவை பிரிந்த பிறகு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார் சைதன்யா. இந்நிலையில் தனக்கு விவாகரத்து ஆனபோது நடந்தவற்றை ஓபனாக பேசியிருக்கிறார் சமந்தா.

தமிழ் சினிமாவில் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா பட தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். சைதன்யாவின் குடும்பம் பெரிய மற்றும் பாரம்பரியமிக்க குடும்பம் என்பதால் முதலில் அவர்கள் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டு பேரும் காதலில் உறுதியாக இருந்ததால் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

விவாகரத்து பெற்ற ஜோடி: திருமணத்துகு பிறகு சுமூகமாக போய்க்கொண்டிருந்தது அவர்களது வாழ்க்கை. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார்கள். அந்த விவாகரத்துக்கு யூகங்களாக ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் நாக சைதன்யா தரப்பில் கொடுக்கப்பட்ட ஜீவனாம்சத்தையும் சாம் வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. ஆனால் இதில் எவ்வளவு உண்மை என தெரியவில்லை.

Samantha Opens Up About Divorce Pain and People Celebrating Her Struggles
Photo Credit:

2வது திருமணம்: சமந்தாவை பிரிந்த பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் நாக சைதன்யா. மகனின் வாழ்க்கை இதிலாவது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார் நாகார்ஜுனா. கடந்த வருடம் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதற்கிடையே மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் சமந்தா. இப்போது மீண்டும் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ராஜுடன் காதல்: நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் சமந்தா செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறார். அதேசமயம் ஃபேமிலி மேன், சிட்டாடல் உள்ளிட்ட வெப் சீரிஸ் இயக்குநர்களில் ஒருவரான ராஜுவை சாம் காதலிப்பதாகவும்; இரண்டு பேரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் எதுவும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா பேட்டி: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா வேதனையோடு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் பேசுகையில், "எனது வாழ்க்கையில் நான் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருக்கிறேன். நான் சிக்கலில் இருந்தபோது சிலர் அதை கொண்டாடினார்கள். எனக்கு மையோசிடிஸ் வந்தபோதும், விவாகரத்து நடந்தபோதும் மகிழ்ச்சியாக அதை கொண்டாடினார்கள். அதை பார்க்கும்போது மனம் வலித்தது. படிப்படியாக அதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடியது யாராக இருக்கும் என்று தேடுதல் வேட்டையிலும், கணிப்புகளிலும் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X