என்னது சமந்தா கர்ப்பமா... புதிய அறிவிப்பால் கிளப்பிய புதிய வதந்தி

சென்னை : தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அடுத்தடுத்து பட ஹிட் படங்களை கொடுத்து முக்கியமான, வெற்றி பட ஹீரோயினாக இருந்து வருகிறார்.

தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிசில் ஈழ தமிழ் பெண் கேரக்டரில் நடித்ததற்காக சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அதே சமயம் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்த சர்ச்சைகள், தான் அடுத்து நடிக்கும் படங்கள், எதிர்கால திட்டம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி உள்ளார் சமந்தா.

கவுதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து, நடிகையாக அறிமுகமானார் சமந்தா. அதைத் தொடர்ந்து அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சீசாவே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதே சமயம் தமிழிலும் பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.

11 ஆண்டுகள் நிறைவு

11 ஆண்டுகள் நிறைவு

அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சமந்தா நடிக்க வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் இதுவரை பிரேக் ஏதும் இல்லாமல் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் தெலுங்கில் வரலாற்று படமான சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

அதைத் தொடர்ந்து தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இது முக்கோண காதலை மையமாக கொண்ட படமாகும். புதுச்சேரியில் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடந்து வருகிறது.

பிரேக் அறிவித்த சமந்தா

பிரேக் அறிவித்த சமந்தா

தற்போது நடித்து வரும் படங்கள் தவிர புதிய படங்கள் எதிலும் சமந்தா ஒப்பந்தம் ஆகவில்லை. இது பற்றி அவரிடம் கேட்ட போது, தற்போது ஒப்பந்தமாகி உள்ள படங்களை முடித்த பிறகு சில மாதங்கள் தான் ஓய்வெடுக்க போவதாக தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமந்தாவின் பிளான்

சமந்தாவின் பிளான்

தனக்காக நேரம் ஒதுக்க போவது தான் தனது அடுத்த பிளான் என சமந்தா தெரிவித்துள்ளார். இதனால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Family Man 2 Stunt Making Video | Behind The Scenes
சமந்தா கர்ப்பமா

சமந்தா கர்ப்பமா

சில மாதங்கள் பிரேக் எடுக்க போவதாக சமந்தா கூறி உள்ளார். ஆனால் எத்தனை மாதங்கள் என அவர் சரியாக சொல்லவில்லை. இதனால் சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கர்ப்பம் காரணமாக தான் அவர் பிரேக் எடுக்க போகிறாரா என பல விதமான சந்தேகங்கள் எழுந்துள்ளது.

விவாகரத்து வதந்தியே முடியல

விவாகரத்து வதந்தியே முடியல

சமீபத்தில் சோஷியல் மீடியா பக்கங்களில் டிஸ்பிளே பெயரை சமந்தா மாற்றியதால், அவர் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்தி பரவியது. இது பற்றி வாய் திறக்காமல் இருந்த சமந்தா, கோவாவில் தனது கணவருடன் சேர்ந்து பிரம்மாண்ட இடத்தில் பண்ணை வீடு ஒன்றை அமைக்க போகிறார் என்ற தகவல் வெளியானது.

இது தான் பிளானா

இது தான் பிளானா

கணவருடன் உல்லாசமாக பொழுதை கழிக்க இந்த பிரம்மாண்ட பண்ணை வீட்டை, உலகத்தரத்தில் சமந்தா அமைத்து வருவதாக கூறப்பட்டது. தற்போது அவர் பிரேக்கை அறிவித்துள்ளதால் குடும்பம், குழந்தை என சமந்தா செட்டில் ஆகும் பிளானில் இருப்பதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X