அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய சமந்தா… சைலண்டாக முடிந்த சிகிச்சை…

சென்னை: தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.

சமந்தா நடிப்பில் யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த சமந்தா மும்பை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் சாம்ஸ்

ரசிகர்களின் சாம்ஸ்

2010ல் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. கடந்த 12 ஆண்டுகால சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இப்போது மொழிகளைக் கடந்து ரவுண்டு அடித்து வருகிறார், நாக சைத்தன்யாவுடன் காதல், திருமணம், பிரிவு என பல சர்ச்சைகளையும் சோதனைகளையும் கடந்து, பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார் சமந்தா. தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் கதிஜாவாக நடித்திருந்தார் சமந்தா.

யசோதா, சாகுந்தலம், குஷி

யசோதா, சாகுந்தலம், குஷி

சமந்தா தற்போது யசோதா, சாகுந்தலம், விஜய் தேவரகொண்டாவுடன் குஷி ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம், நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தை 3டியில் மாற்ற உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா சென்றிருந்த சமந்தா தற்போது மும்பை திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் சிகிச்சை?

அமெரிக்காவில் சிகிச்சை?

சமந்தாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்னை ஏற்பட்டது. பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்' என்ற தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் 'அஞ்சான்' படப்பிடிப்பின்போது அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சமந்தா கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றுள்ளதாகவும் கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால், அது உண்மையில்லை என அவரது மேலாளரும் விளக்கம் கொடுத்திருந்தார்.

மும்பை திரும்பினார்

மும்பை திரும்பினார்

இந்நிலையில், சமந்தா தற்போது சைலண்டாக சிகிச்சை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், வருண் தவானுடன் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள சமந்தா அதன் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குவதாகவும் அதற்காக சமந்தா ரெடியாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி' படத்தின் எஞ்சியிருக்கும் பகுதிகளில் நடிக்கவுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X