நான் பல்லாவரம் பொண்ணு.. என்னைப் பத்தி அதிகமா இதுக்குத் தான் தெரியும்.. வைரலாகும் சமந்தாவின் வீடியோ!

சென்னை: நடிகை சமந்தா பல்லாவரம் பற்றியும் அங்குள்ள மலை குறித்தும் போட்டுள்ள உணர்ச்சிபூர்வமான வீடியோ ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகியுள்ள சமந்தா, தான் எப்போதும் பல்லாவரம் பொண்ணு தான் என்பதை நினைவுபடுத்தும் விதமாக தற்போது இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

மேலும், மனிதர்களை விட தன்னை பற்றி அதிகமாக இந்த மலைக்குத் தான் தெரியும் என்று அவர் கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

சென்னையில் ஷூட்டிங்

சென்னையில் ஷூட்டிங்

டோலிவுட்டில் பிசியாகி இருந்த நடிகை சமந்தா, இப்போ இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். அதன் காரணமாக சென்னையிலே மீண்டும் தற்காலிகமாக தங்கியுள்ளார்.

பல்லாவர நினைவுகள்

பல்லாவர நினைவுகள்

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தான் பிறந்து வளர்ந்தார் நடிகை சமந்தா. இந்நிலையில், தற்போது தனது காரில் சென்று கொண்டே, பல்லாவரத்தையும் அங்கே தெரியும் மலையையும் வீடியோ எடுத்துப் போட்டு ஒரு அழகான குட்டி ஸ்டோடியையும் தனது ரசிகர்களுக்காக கூறியுள்ளார்.

இந்த மலைக்குத்தான் தெரியும்

மனிதர்களை விட என்னைப் பற்றி அதிகமாக இந்த மலைக்குத் தான் தெரியும் என கேப்ஷன் கொடுத்துள்ள சமந்தா, தினமும் தூங்கி எழுந்ததும் என் வீட்டு டெரஸில் இருந்து இந்த மலையை பார்ப்பேன். என்னுடைய சுக துக்கங்கள், பரீட்சை பயம், நண்பன் இழந்த சோகம், முதல் காதல் என அனைத்தையும் இந்த மலையுடன் தான் ஷேர் பண்ணி உள்ளேன் என உருகி வீடியோ போட்டுள்ளார்.

11 ஆண்டுகள்

11 ஆண்டுகள்

சமீபத்தில் நடிகை சமந்தா சினிமா துறையில் நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் கெளதம் மேனன் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்தார். விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் தான் சமந்தா முதன் முதலாக அறிமுகமானார். அந்த படத்தில் நடித்த நாக சைதன்யாவையே திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி போட்டோஸ்

கவர்ச்சி போட்டோஸ்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் இறக்கி தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 15.2 மில்லியன் ரசிகர்கள் தற்போது நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது. சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ் விரைவில் வெளியாகவிருக்கிறது. சகுந்தலம் எனும் தெலுங்கு படத்திலும் கமீட் ஆகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X