Don't Miss!
- News
குடியரசு தின விழா.. தெலுங்கானா அரசு புறக்கணிப்பது புதிது இல்லை.. வாடிக்கையாகிவிட்டது.. தமிழிசை வேதனை
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Finance
புதிய கார், புதிய பைக் இப்போதைக்கு வாங்கிடாதீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
''இதுவும் கடந்து போகும்''சாகுந்தலம் டிரைலர் வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய சமந்தா..பதறிய ஃபேன்ஸ்!
ஹைதராபாத் : சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சமந்தா மேடையிலேயே கண்கலங்கியது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
புராணகதை அம்சத்தைக் கொண்ட சாகுந்தலம் படத்தில், சமந்தா, சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் நவம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சில பிரச்சனையால் வெளியாகவில்லை. இதையடுத்து, இப்படம் பிப்ரவரி 17ந் தேதி வெளியாக உள்ளது.
மாய
சக்தியால்
காதலை
மறக்கலாம்..அவமானத்தை
மறக்க
முடியாது..
வெளியானது
சமந்தாவின்
சாகுந்தலம்
டிரைலர்!

டிரைலர் வெளியீட்டு விழா
இந்நிலையில், இன்று சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சமந்தா கலந்து கொண்டார். சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பின் இப்போது பொது நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்தித்ததால், விசில் அடித்து, கைதட்டி ஆரவாரம் செய்து அவரை வரவேற்றனர்.

கண்கலங்கிய சமந்தா
இந்த விழாவில் பேசிய இயக்குனர் குணசேகர்,சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பல நடிகைகளை நான் சந்தித்து இருக்கிறேன், யாரும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. கடைசியில் தயாரிப்பாளர் நீலிமா, சமந்தா இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்றார். அவர் சொன்னது போல சாகுந்தலம் படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என்றார். இயக்குநரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சமந்தா, திடீரென மேடையில் அனைவர் முன்பும் கண்கலங்கினார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

நான் சினிமாவை நேசிக்கிறேன்
இதையடுத்து பேசிய சமந்தா, இந்த நாளுக்காக நான் பல நாட்கள் காத்திருந்தேன், வாழ்க்கையில் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், நான் சினிமாவை நேசிக்கிறேன், சினிமா என்னை நேசிக்கிறது. சினிமா மீதான காதல் மாறவில்லை என்றார்.

நான் அதிர்ஷ்டசாலி
மேலும், சரித்திர திரைப்படத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் குணசேகருக்கு நன்றி, இந்த கதாபாத்திரத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய இலக்கிய வரலாற்றில், சகுந்தலாவின் கதை மறக்க முடியாத ஒன்றாகும். குணசேகர் சார் என்னை இந்தக் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தது என் அதிர்ஷ்டம், உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி என்றார்.

சாகுந்தலம் டிரைலர்
அதையடுத்து சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட செட்டுகளுடன் அரசர் கால கதையைக்கொண்ட டிரைலர் மிகவும் மிரட்டலாக உள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உள்ள இப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக பிப்ரவரி 17ந் தேதி வெளியாக உள்ளது.