எலும்பும் தோலுமாக மாறிய சமந்தா...பதறிப்போய் ஆறுதல் சொன்ன ரசிகர்கள்!
சென்னை : நடிகை சமந்தா எலும்பும் தோலுமாக ஆளே மாறிப்போன புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட உடலில் குளுகோஸ் ஏற்றியபடி சிகிச்சை எடுத்துகொண்டு ஸ்டுடியோவில் டப்பிங் பேசும் படத்தை வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதில், நான் நடித்த யசோதா படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்த அன்புதான் எனக்கு சவால்களில் இருந்து மீளும் கருவியாக அமைந்துள்ளது. நான் சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டேன்.

மோசமான நாட்கள்
நோயின் பாதிப்பு குறைந்ததும் அனைவரிடமும் சொல்லிக்கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நினைத்ததைவிட குணமாக அதிக நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இந்த நோய் பாதிப்புடன் போராடி வருகிறேன். விரைவில் குணமடைவேன் என்று டாக்டர்கள் நம்புகிறார்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், நல்ல நாட்களையும், மோசமான நாட்களையும் எதிர்கொண்டு இருக்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.

எலும்பும் தோலுமாக
இந்நிலையில், சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கறுப்பு உடையில் கண்ணாடி அணிந்து கொண்டு எலும்பும் தோலுமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், ஒரு நாள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் குளித்து, எழுந்து நின்று நம் வேலை பார்க்க வேண்டும் என் நெருங்கிய நண்பர் கூறுவார். அதை தான் இன்றைக்கு பின்பற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

யசோதா
நடிகை சமந்தா இயக்குனர் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள யசோதா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா சத்ரு, பிரியங்கா சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.

சமந்தாவை பாராட்டிய ரசிகர்கள்
இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளதால் இந்த படத்தின் ப்ரோமோஷனில் சமந்தா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. உடல் நிலை மோசமாக இருந்த போதும் ப்ரோமோஷனில் கலந்து கொள்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது என ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











