»   »  சமந்தாவின் ரோல் மாடல் யார் தெரியுமா?

சமந்தாவின் ரோல் மாடல் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ரேவதி மாதிரி நடிக்க ஆசை அதனால் கண்ணாடி முன்பு நின்று ரேவதி போல நடித்து பழகினேன் என்று தனது மனதில் உள்ளதை மறைக்காமல் கூறியுள்ளார் நடிகை சமந்தா. நகைக்கடை விளம்பரத்தில் ரேவதியின் மகளாக நடித்ததன் மூலம் தனது பலநாள் கனவு நனவாகிவிட்டதாகவும் கூறியுள்ளார் சமந்தா.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் விளம்பரப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார் சமந்தா. சமீபத்தில் நடிகை ரேவதியுடன் சமந்தா நடித்த நகைக்கடை விளம்பரம் பிரபலமடைந்துள்ளது. இதற்குக் காரணம் ரேவதி மீது தான் கொண்ட அன்பு அப்படியே வெளிப்பட்டுள்ளது என்கிறார் சமந்தா.

வாய்ப்பு தர மறுப்பு

வாய்ப்பு தர மறுப்பு

நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்பு தேடி அலைந்தேன். பல இயக்குநர்கள் எனக்கு நடிப்பு வரவில்லை என்று ஒதுக்கினார்கள். இது எனக்கு மனவருத்ததை ஏற்படுத்தியது.

ரேவதி போல நடித்தேன்

ரேவதி போல நடித்தேன்

சிலர் என்னிடம் ரேவதி போல் நடிப்பது உன் தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்றனர். இதனால் ரேவதி நடித்த பழைய படங்களின் சி.டி.க்களை வாங்கிப்போய் வீட்டில் போட்டு பார்த்தேன்.

கண்ணாடி முன் பயிற்சி

கண்ணாடி முன் பயிற்சி

சிறு வயதில் இருந்தே எனக்கு ரேவதியை பிடிக்கும். எனவே அவர் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை சி.டி.க்களை பார்த்து உள்வாங்கி அதுமாதிரி நடித்து பயிற்சி எடுத்தேன். கண்ணாடி முன்னால் நின்று ரேவதி போல் நடித்தும், பேசியும் பழகினேன்.

தனி பாணியில் நடிப்பு

தனி பாணியில் நடிப்பு

சினிமா வாய்ப்பு கிடைத்த உடன் இப்போது எனக்கு என்று தனி பாணியை வகுத்து நடித்து வருகிறேன். சமீபத்தில் விளம்பர படமொன்றில் ரேவதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. மிகவும் சந்தோஷப்பட்டேன்.

என் ரோல் மாடல்

என் ரோல் மாடல்

ஒவ்வொரு நடிகையும் இவரைப்போல் வரவேண்டும் என்று ஒரு நடிகையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார்கள். என் சினிமா வாழ்க்கையில் முன்மாதிரியாக இருப்பவர் ரேவதிதான் என்று கூறியுள்ளார் ரேவதி.

பிஸியான சமந்தா

பிஸியான சமந்தா

சமந்தா தற்போது சூர்யாவுடன் ‘24' என்ற படத்திலும், தனுஷ் ஜோடியாக ‘தங்க மகன்' என்ற படத்திலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜய்யின் 59வது படமான தெறி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Samantha said that during the initial days, filmmakers gave her the DVDs of senior actress Revathi’s flicks and instructed to learn acting skills from her.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil