உங்க கூட சேர்ந்து ’இனப்பெருக்கம்’ செய்யணும்னு கேட்ட நெட்டிசன்.. சமந்தா கொடுத்த சவுக்கடி பதில்!

சென்னை: நடிகை சமந்தாவிடம் மோசமான கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு அவர் கொடுத்துள்ள சரியான பதிலடி டிரெண்டாகி வருகிறது.

சாதனைகளும் சர்ச்சைகளும் என நடிகை சமந்தாவை சுற்றி ஏகப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

அருவி போல எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்டது தான் வாழ்க்கை அதை ரசிக்க வேண்டும் அல்லது சகித்துக் கொள்ள வேண்டும் என சமீபத்தில் அதிரபள்ளி அருவி அருகே எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு சமந்தா கேப்ஷன் போட்ட நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க சிறிது நேரத்தை செலவழித்துள்ளார்.

சகுந்தலம் ஃபர்ஸ்ட் லுக்

சகுந்தலம் ஃபர்ஸ்ட் லுக்

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சகுந்தலம் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை சமந்தா ஷேர் செய்ய ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் வாரி இறைத்தனர். அதனை தொடர்ந்து நடிகை சமந்தா AMA எனும் Ask me Anything எனும் கேள்வி பதில் நேரத்தை ரசிகர்களுடன் செலவழித்தார்.

இவ்ளோ தைரியமா எப்படி இருக்கீங்க

இவ்ளோ தைரியமா எப்படி இருக்கீங்க

கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நடிகை சமந்தா துணிச்சலுடன் பல முடிவுகளை எடுத்து வரும் நிலையில், ரசிகர் ஒருவர் சமந்தாவிடம், இவ்ளோ தைரியமா எப்படி இருக்கீங்க? என்கிற கேள்வியை எழுப்ப, பெரிய துன்பங்களை எதிர்கொண்டால் தைரியம் தானாக வந்து சேரும் என பதில் அளித்தார்.

இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா

இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா

ரசிகர்கள் நடிகை சமந்தாவின் நடனம் குறித்தும் அவருக்கு பிடித்த பாடல்கள் குறித்தும், அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்கிற பல சினிமா சார்ந்த கேள்விகளை எழுப்ப அதற்கு பதில் அளித்து வந்த சமந்தா, நெட்டிசன் ஒருவர் நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? என்கிற மோசமான கேள்வியை எழுப்பினார்.

அநாகரிகமான கேள்வி

அநாகரிகமான கேள்வி

மேலும், உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசையாக உள்ளது ("Have u reproduced cuz I wanna reproduce u," ) என்றும் வரம்பு மீறிய கேள்வியை கேட்க, அதை அப்படியே விட்டு விடாமல் அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சமந்தா போட்ட ரிப்ளை தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சமந்தா சவுக்கடி

சமந்தா சவுக்கடி

நடிகை சமந்தாவை பார்த்து இப்படியொரு கேள்வியை எழுப்பிய நெட்டிசனுக்கு, நடிகை சமந்தா, முதலில் ஒரு வாக்கியத்தில் 'இனப்பெருக்கம்' எனும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள் ("How to use 'reproduce' in a sentence. Should have googled that first?") என பதில் அளித்து அந்த நெட்டிசனை நேரடியாக திட்டாமல் அழகாக அசிங்கப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X