தி ஃபேமிலி மேன் படப்பிடிப்பில் செம குஷியாக டான்ஸ் ஆடிய சமந்தா... வைரலாகும் க்யூட் வீடியோ!

மும்பை : நடிகை சமந்தா இலங்கை பெண் போராளியாக நடித்திருந்த தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Recommended Video

Family Man 2 Stunt Making Video | Behind The Scenes

இந்தியில் நடிக்க பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் சகுந்தலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் சமந்தா இப்பொழுது ஃபேமிலி மேன் படப்பிடிப்பில் செம க்யூட்டாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

தி ஃபேமிலி மேன்

தி ஃபேமிலி மேன்

தமிழ்,தெலுங்கு,மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா இரு மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மூலம் அறிமுகமானார். ஆரம்பமே அமர்க்களமாக நடித்து முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்.

விரைவிலேயே இந்தி படத்தை

விரைவிலேயே இந்தி படத்தை

ஃபேமிலி மேன் வெற்றியைத் தொடர்ந்து ஹிந்தியில் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரை தேடி வந்து கொண்டே இருக்க மிக விரைவிலேயே அடுத்த இந்தி படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

தெலுங்கில் சகுந்தலா

தெலுங்கில் சகுந்தலா

இப்பொழுது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள் என்பதால் மற்றுமொரு ஹீரோயினியாக நயன்தாரா நடிக்க கதாநாயகனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார் இதன் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சகுந்தலா என்ற பிரம்மாண்ட படத்திலும் சமந்தா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செம குஷியாக டான்ஸ்

செம குஷியாக டான்ஸ்

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் வெளியாவதற்கு முன்பாகவே பல சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒருவழியாக ஜூன் 2ம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டது. அதில் முற்றிலும் வித்தியாசமான நடிப்பை சமந்தா வெளிப்படுத்தி பார்க்கும் அனைவரையும் மிரட்டி இருந்தார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ஹீரோக்களையே மிஞ்சும் அளவிற்கு தெறிக்க விட்டிருந்தார். இந்நிலையில் ஃபேமிலி மேன் படப்பிடிப்புத் தளத்தில் ஆங்கில பாடல் ஒன்றுக்கு செம நைஸாக அலுங்காமல் குலுங்காமல் போட்ட மேக்கப் மற்றும் காஸ்ட்யூமுடன் பின் பாட்டு பாடிக்கொண்டே செம குஷியாக டான்ஸ் ஆடிய க்யூட்டான வீடியோவை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X