நான் சரியானவள் இல்லை...முதல் முறை மனம் திறந்த சமந்தா
சென்னை : தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வரும் சமந்தா, ஜுலை மாதம் திடீரென சோஷியல் மீடியா பக்கங்களில் தனது டிஸ்பிளே பெயரை மாற்றினார். இதனால் அவரை தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய போவதாக வதந்திகள் பரவின.
ஆனால் விவாகரத்து வதந்திகள் பற்றி எதுவும் பேசாமல் இருந்த சமந்தா, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தனது கணவரை பிரிய போவதாக அறிவித்தார். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் ஒரே சமயத்தில் சோஷியல் மீடியாவில் பிரிவை அறிவித்தனர்.

பெயரை மாற்றி சமந்தா
இதைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மீண்டும் தனது பெயரை சமந்தா பிரபுருத் என்றே மாற்றிக் கொண்டார். தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், மீடியாக்கள் அனைவருக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் சமந்தா. விவாகரத்து மிகவும் வலியானது அதில் இருந்து மீண்டு வர தனக்கு சில காலம் தேவை என்றும் கூறி இருந்தார்.

ஆன்மிக பயணம்
இந்நிலையில் கணவரை பிரிந்த பிறகு, தனது தோழி ஷில்பா ரெட்டியுடன் கேதார்நாத், பத்ரிநாத் என ஆன்மிக பயணம் புறப்பட்டு சென்றார் சமந்தா. தற்போது அவர் துபாயில் இருந்து வருகிறார். இதற்கிடையில் தன்னை பற்றி அவதூறு தகவல்களை பரப்பிய தெலுங்கு யூட்யூப் சேனல்களுக்கு மீதான அவதூறு வழக்கில் சமந்தாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

மோடிவேஷன் போஸ்ட்
இந்நிலையில் முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோடிவேஷன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில், நான் வலிமையானவள்; நான் உறுதியானவள்; நான் சரியானவள் இல்லை; எனக்கு நான் சரியானவள்; நான் எப்போதும் பின் வாங்குவதில்லை; நான் நேரசானவள்; நான் உறுதியானவள்; நான் கண்டிப்பானவள்; நான் மனிதநேயம் மிக்கவள்; நான் போராளி என குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய போஸ்டா இது
அதோடு இது தனது அம்மா கூறியது என பதிவிட்டு இந்த வாசகம் அடங்கிய ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். இதே போல், பெற்றொர்கள் தங்கள் மகளின் திருமணத்திற்கு சேமித்து வைக்கும் பணத்தை அவளை படிக்க வைக்க பயன்படுத்த வேண்டும் என பெற்றோர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் உண்மையில் இது இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பதிவிட்டதாகும். இதை சமந்தா தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கணவர் ஃபோட்டோக்கள் நீக்கம்
இருந்தாலும் கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு மன வருத்தத்தில் இருந்த சமந்தா, இது போல் நம்பிக்கையாக ஒரு பதிவை வெளியிட்டதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் தான் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டிருந்த தனது கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து இருக்கும் தனது திருமண ஃபோட்டோ உள்ளிட்ட அனைத்து ஃபோட்டோக்களையும் சமந்தா நீக்கி இருந்தார்.


Click it and Unblock the Notifications











