ஒரே பதில்...அத்தனை வதந்திகளையும் அடித்து நொறுக்கிய சமந்தா
ஐதராபாத் : தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் சாகுந்தலம் ஆகிய படங்கள் இவர் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
Recommended Video
இதற்கு முன் சமந்தா நடித்த தி ஃபேமிலிமேன் வெப் சீரிஸ் இலங்கை தமிழ் பெண் ரோலில் நடித்தது பெரும் பாராட்டை பெற்றது. இதில் சமந்தாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதனால் பாலிவுட்டிலும் பல படங்களில் நடிக்க சமந்தாவிடம் பேசப்பட்டு வருகிறது.

விவாகரத்து வதந்தி
நடிப்பில் டாப்பில் இருக்கும் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கடந்த சில மாதங்களாக வெளியாகி வரும் தகவல் எதுவும் அவருக்கு எதிராகவே இருந்து வருகின்றன. சமந்தாவிற்கும், அவரது கணவர் நாக சைதன்யாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து பெற போகிறார்கள் என்றும் பல விதங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

அடுத்த மாதம் விவாகரத்து
அடுத்த மாதம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைக்க உள்ளதாகவும், இதற்காக சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக ரூ.50 கோடி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. சமந்தாவும் நாக சைதன்யாவும் சேர்ந்து வாழ பலமுறை கவுன்சிலிங் கொடுக்கப்பட்டும், அவர்கள் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ரசிகர்களுடன் கலந்துரையாடல்
இந்நிலையில் ஃபேஷன் தொழிலில் சமந்தா அடியெடுத்து வைத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. Saakhi World என்ற ஆடை நிறுவனத்தை சமந்தா நடத்தி வருகிறார்கள். இதன் முதலாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சமந்தா, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஐதராபாத்தை காலி செய்கிறேனா
அப்போது ரசிகர்கள் ஒருவர், கணவர் நாக சைதன்யா பிரிந்து சென்று அப்பா நாகர்ஜுனா வீட்டில் வாழ்வதால், ஐதராபாத் வீட்டை காலி செய்து விட்டு, மும்பையில் போய் செட்டில் ஆக போவதாக கூறுகிறார்களே அது உண்மையா என கேட்டார். இதற்கு சமந்தா அளித்துள்ள பதில், இதுவரை வெளிவந்த அனைத்து வதந்திகளையும் அடித்து நொறுக்குவதாக உள்ளது.

எதுவும் உண்மையில்லை
இன்ஸ்டாகிராம் சாட்டில் சமந்தா அளித்துள்ள பதிலில், இது போன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்புகிறது என்றே தெரியவில்லை. நூற்றுக்கணக்கான வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அவைகள் எதுவும் உண்மையில்லை. ஐதராபாத் தான் எனது சொந்த ஊர். நான் எனது சொந்த ஊரில் தான் எப்போதும் இருப்பேன். ஐதராபாத் தான் எனக்கு அனைத்தையும் தந்தது. தொடர்ந்து நான் இங்கு தான் இருப்பேன் என்றார்.

நேரடி பதில் சொல்லாத சமந்தா
அதே சமயம் நாக சைதன்யாவை பிரிந்து வாழ்கிறீர்களா என கேட்ட கேள்விக்கு சமந்தா பதிலளிக்கவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கில் வெளியாகும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என அவர் கூறிய பதிலில் இருந்தே, விவாகரத்து தொடர்பாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய் என்பது தெளிவாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











