சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆகிடுச்சு.. சமந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு.. என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்கு வெர்ஷனான Ye Maaya Chesave என கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா.

தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும், தமிழில் உதவி இயக்குநர் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

சாதித்த சமந்தா

சாதித்த சமந்தா

சினிமாவில் பப்ளி ஹீரோயினாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கலக்கி விட்டு பின்னர் காணாமல் போகும் எத்தனையோ பேரை பார்த்திருப்போம். ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டுமே 10 ஆண்டுகளை கடந்தும் தனது மார்க்கெட் கொஞ்சமும் இறங்காமல் பார்த்துக் கொண்டு கொடி கட்டி சாதனை நாயகியாக திகழ்கின்றனர். நடிகை சமந்தா இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் உயர பறந்து கொண்டே செல்ல முழுக் காரணமும் அவரது தனித்திறமை தான்.

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி தமிழில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியானது. அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனான Ye Maaya Chesave படத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடியாக நடித்திருந்தனர். அந்த படம் தான் ஹீரோயினாக சமந்தாவுக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகள்

12 ஆண்டுகள்

அந்த படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகை சமந்தா இன்று தனது சினிமா வாழ்க்கையின் 12வது ஆண்டை நிறைவு செய்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகிறார். இத்தனை ஆண்டுகளில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் நடிகை சமந்தா.

விஸ்வாசமான ரசிகர்கள்

விஸ்வாசமான ரசிகர்கள்

இன்றுடன் நான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 12 ஆண்டுகளிலும் லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் என பல மறக்க முடியாத அனுபவங்களுடன் வாழ்ந்துள்ளேன். ஒவ்வொரு தருணமும் எனக்கு சிறந்த தருணமாக இருந்தது. மேலும், எப்போதுமே என் பக்கம் நிற்கும் உலகிலேயே விஸ்வாசமான ரசிகர்களை நான் பெற்றதே எனது பெரிய பாக்கியம் என நடிகை சமந்தா நெகிழ்ச்சியான பதிவை போட்டு அட்டகாசமான ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

காமன் டிபி

காமன் டிபி

நடிகை சமந்தா தனது 12வது ஆண்டு சினிமா வாழ்க்கையை கொண்டாடி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் ஸ்பெஷல் காமன் டிபிக்களை உருவாக்கி ட்விட்டரை அதகளப்படுத்தி வருகின்றனர். இப்போதான் பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. செகண்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்து மேலும், பல சாதனைகளை படைக்க வேண்டும் சமந்தா என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!
காத்திருக்கும் லிஸ்ட்

காத்திருக்கும் லிஸ்ட்

தெலுங்கில் சகுந்தலம் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. யசோதா திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறியுள்ள சமந்தா இந்தியிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச திரைப்படமான Arrangements of Love எனும் படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X