Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டி..டிடிவி தினகரன் உறுதி..நாளை வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பணம், பெயர், புகழுக்காக அலையமாட்டேன்...உருக்கமாக பேசிய சமந்தா!
சென்னை : பணம், பெயர், புகழுக்காக அலையமாட்டேன் என்று நடிகை சமந்தா உருக்கத்துடன் பேசி உள்ளார்.
மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்து இருந்தார்.
அரியவகை நோயால் மிகவும் கடினமான நாட்களை நான் அனுபவித்து வந்தேன் என்றும், ஆனால், உயிருடன் இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார். மயோசிடிஸ் சிகிச்சைக்காக கேரளாவில் தங்கி சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சமந்தா விவாகரத்து, தீபிகா படுகோன் காவி பிகினி... தொடரும் சர்ச்சைகள் குறித்து சூடான திவ்யா ஸ்பந்தனா

யசோதா படத்தில்
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் யசோதா திரைப்படம் வெளியானது. வாடகை தாய் மூலம் நடக்கும் முறைகேடுகள் குறித்து த்ரில்லிங் படமாக இருந்தது. இந்த படத்திற்காக சமந்தா பல சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருந்தார். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டது. தற்போது, அமேசான் பிரைமிலும் இந்த படம் மாஸ் காட்டி வருகிறது.

கண்ணீருடன் பேசினார்
இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்த சமந்தாவைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தார். தனக்கு ஏற்பட்டுள்ள மயோசிடிஸ் நோய் குறித்தும், நோயால் தான்பட்ட கஷ்டம் குறித்தும் மனம் திறந்து கண்ணீருடன் கூறினார். சமந்தாவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் சற்று கலங்கிப் போனார்கள்.

பணம், பெயர் முக்கியம் இல்லை
இந்நிலையில்,சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சமந்தா, எனக்கு பணம், பெயர் முக்கியம் இல்லை புகழுக்காக என்றும் அலையமாட்டேன். பணத்தை விட எனக்கு நடிப்பு தான் முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசித்து நடிக்கிறேன். எனக்கு நானே விமர்சகர் என்னுடைய தவறை நானே விமர்சனம் செய்து கொள்கிறேன் என்றார்.

வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும்
மேலும், காலமும், நேரமும் நமக்கு சாதகமாக இல்லாத போது பல பிரச்சனைகள் நம்மை சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் அதையே நினைத்து கொண்டு கவலைப்பட மாட்டேன். உனக்கு பிடித்தது போலவே நான் இருக்கிறேன். நாம் பிறந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவோ இல்லை. நாம் சந்தோஷமாக இருந்தால் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும் என்றார்.

கோபம் வரும் போதெல்லாம்
தொடர்ந்து பேசிய சமந்தா, எனக்கு கோபம் வரும் போதெல்லாம் ஜிம்முக்கு சென்று கண்டபடி உடற்பயிற்சி செய்வேன், அப்போது தான் என் கோவம் தணியும், நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் என்றார்.சமந்தாவின் இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள், அவரின் மன தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

சாகுந்தலம்
தற்போது நடிகை சமந்தா, சாகுந்தலம்,குஷி என்ற தெலுங்கு படத்திலும், ஆராத்யா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகிறது. மேலும், விஜய்தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில்,படம் பிப்ரவரிக்கு வெளியாக உள்ளது.