செம எனர்ஜி மேடம் ... சைக்கிளிங்கிலும் அசத்துறாரே சமந்தா
சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்த படியாக பல தெலுங்கு படங்களில் நடிக்க அவரிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய வதந்திகள் தொடர்ந்து மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது. சமந்தா - நாக சைதன்யா இடையேயான விவாகரத்து விவகாரம் முடிவில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

பெயரை மாற்றிய சமந்தா
ஜுலை மாதம் சாகுந்தலம் படத்திற்காக சோஷியல் மீடியா பக்கங்களில் தனது பெயரை மாற்றி, எஸ் என பதிவிட்டார். இதனால் சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிய போவதாகவும், விவாகரத்து தொடர்பான நடைமுறைகள் கோர்ட்டில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நாகார்ஜுனா வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம், விருந்து ஆகியவற்றிலும் சமந்தா கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

பத்திரிக்கையாளரை திட்டிய சமந்தா
நாகர்ஜுனா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலமுறை முயற்சித்தும் சமந்தா - நாகசைதன்யா ஜோடி இடையேயான பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என கூறப்பட்டது. இருவரும் பல மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் பற்றி சமந்தா மற்றும் நாக சைதன்யா தரப்பில் இதுவரை வாய் திறக்கவில்லை. திருப்பதி கோயிலுக்கு சென்ற போது, கோயில் வாசலில் விவாகரத்து வதந்தி பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட போது சமந்தா அதற்காக கோபப்பட்டுள்ளார்.

ஓயாத விவாகரத்து வதந்தி
நாக சைதன்யா நடித்துள்ள லவ் ஸ்டோரி பட டிரைலர் ரிலீஸின் போது சமந்தா வாழ்த்து கூறியதால் விவாகரத்து வதந்தி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வேறு விதமான வதந்திகளை உருவாக்கியது. அதற்கு பிறகு நாகேஸ்வர ராவின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்ஜுனா வெளியிட்ட வீடியோவிற்கு, சூப்பர் மாமா என சமந்தா பதிவிட்ட கமெண்ட்டும் விவாகரத்து வதந்தியை முடித்து வைக்கவில்லை.

பிரச்சனை ஏதும் இல்லை
ஆனால் மற்றொரு தகவலாக சமந்தா - நாக சைதன்யா இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் இணைந்து மும்பை மற்றும் கோவாவில் வீடு வாங்கி உள்ளதாகவும், இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் சமந்தா, சமீபத்தில் பிரேக்கை அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
Recommended Video

இது தான் காரணமா
அதே சமயம் திருமணத்திற்கு பிறகு சமந்தா தொடர்ந்து நடிப்பதை நாக சைதன்யா மற்றும் நாகர்ஜுனா விரும்பவில்லையாம். ஆனால் நடிப்பை கைவிட மறுத்து வரும் சமந்தா, தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோஷுட்களையும் நடத்தி வருகிறார். இது தான் சமந்தா - நாக சைதன்யா இடையேயான விவாகரத்து பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. இவற்றில் எது உண்மை, எது வதந்தி என தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











