அடேங்கப்பா...சமந்தா போட்ட லெவல் அப் சேலஞ்ச்... தீயாய் தெறிக்க விடும் ரசிகர்கள்
சென்னை : சமந்தா பதிவிட்டுள்ள லெவல் அப் சேலஞ்ச் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் வாவ்...சொல்லி இந்த வீடியோவை ரசித்து, சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.
Recommended Video
தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பலவும் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

சர்ச்சையில் சிக்கிய சமந்தா
கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய போவதாக சமந்தா அறிவிப்பதற்கு முன்பே, கிசுகிசுக்கள், வதந்திகளில் அடிபட்டு வருகிறார் சமந்தா. விவாகரத்தை அறிவித்த பிறகும் இவர் பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. மீடியாக்களில் அதிகம் பேசப்படும் டாப்பிக்காக மாறி உள்ளார் சமந்தா.

ஹிட்டான அயிட்டம் சாங்
விவாகரத்து சர்ச்சைகள் ஒரு வழியாக ஓய்ந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் ஐயிட்டம் சாங் ஒன்றிற்கு ஆடி மிகவும் பாபுலர் ஆகி விட்டார் சமந்தா. இந்த பாடலுக்கு எதிர்ப்புக்கள் எழுந்ததை விட , இளைஞர்களை கவர்ந்து மிகவும் பாப்புலர் ஆகி விட்டார்.

பரபரப்பான சமந்தா
விவாகரத்து, புஷ்பா படத்தில் அயிட்டம் சாங் ஆகியவற்றை தொடர்ந்து படுகவர்ச்சியாக சமந்தா வெளியிட்ட போட்டோக்களும் மீடியாக்கள் அவரை பற்றியே பேச வைத்தன. இதற்கிடையில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா பயிற்சி எடுத்த வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் சமந்தா. அடிக்கடி ஒர்க்அவுட் செய்த வீடியோக்களையும் சமந்தா வெளியிட்டு வருகிறார்.

சமந்தாவின் சேலஞ்ச்
அந்த வரிசையில் இன்று ஒர்க்அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதோடு, 2022 ம் ஆண்டை கிக் ஸ்டார்ட் செய்யுங்கள். எந்த கருவியும் இல்லாமல் இந்த level up சேலஞ்சை செய்யுங்கள். எனது டிரைனர் எனக்கு சேலஞ்ச் செய்தார். இப்போது நான் உங்களுக்கு சேலஞ்ச் செய்கிறேன். லெவல் அப் சேலஞ்சை செய்யுங்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

அடேங்கப்பா...குவியும் லைக்ஸ்
கைகளை கோர்த்தபடி மண்டியிட்டு அமர்ந்த நிலையில் அப்படியே குதித்து எழும்பும் இந்த சேலஞ்சை தான் மற்றவர்களையும் செய்யும் படி கேட்டுள்ளார் சமந்தா. சமந்தா பதிவிட்ட இந்த வீடியோவிற்கு லைக்குகள் எக்கசக்கமாக குவிந்து வருகிறது. இதுவரை இந்த வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











