»   »  தயாரிப்பாளராக மாறும் சமந்தா... சித்தார்த்துக்குப் போட்டியா?

தயாரிப்பாளராக மாறும் சமந்தா... சித்தார்த்துக்குப் போட்டியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையைத் தொடர்ந்து, சமந்தா தயாரிப்பாளராக மாறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லூசியா மூலம் இந்தியத் திரையுலகை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பிய, கன்னட இயக்குநர் பவன் குமாரின் அடுத்த படைப்பு 'யூ டர்ன்'.

Samantha's New Avatar

த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நாயகி வேடத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை சமந்தா வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். மேலும் சொந்தமாக இப்படத்தைத் தயாரித்து நடிக்கவும் சமந்தா முடிவு செய்திருக்கிறாராம்.

பவன் குமாரின் முதல் படமான லூசியாவை தமிழில் சித்தார்த் சொந்தமாக தயாரித்து, நடித்திருந்தார். ஆனால் கன்னட மொழியில் லூசியா பெற்ற வெற்றியை தமிழில் வெளியான எனக்குள் ஒருவன் பெறவில்லை.

சித்தார்த்துடனான, சமந்தாவின் காதல் முறிந்து போனது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் சித்தார்த்துக்குப் போட்டியாக சமந்தா இப்படி செய்கிறாரா? என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளது

சமந்தாவின் நடிப்பில் தெறி, 24 ஆகிய படங்கள் தமிழில் அடுத்தடுத்து வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Samantha Next Turned Producer Avatar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil