»   »  'நான் சொன்னேனா... சினிமாவுக்கு முழுக்குப் போடுகிறேன் என்று சொன்னேனா..?'- சீறும் சமந்தா

'நான் சொன்னேனா... சினிமாவுக்கு முழுக்குப் போடுகிறேன் என்று சொன்னேனா..?'- சீறும் சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. அதிகப் படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நிதானமாக நடிக்கப் போகிறேன் என்றுதான் சொன்னேன். அது புரியாமல் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டன பத்திரிகைள் என்கிறார் நடிகை சமந்தா.

தமிழில் சமந்தா நடித்த தெறி, 24 ஆகிய தமிழ்ப் படங்கள் சமீபத்தில் வெளியாகின. இரண்டுமே அவருக்கு வெற்றிப் படங்கள்தான். இதன் மூலம் சமந்தா நடித்தால் ஓடாது என்ற பழியிலிருந்து வெளிவந்துவிட்டார்.

ட்விட்டர்...

ட்விட்டர்...

அந்த சந்தோஷத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார்.

அதில், "இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடையின் கடைசிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பராக, கேர்ள்ஃபிரண்டாக இல்லை. இதைச் சரிகட்ட, இனி வேகமாக எதையும் செய்யப்போவதில்லை. சிறிது காலத்துக்கு எந்தவொரு புதிய படத்தையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை," என்று கூறியுள்ளார்.

விலகலா?

விலகலா?

இதனால் சினிமாவிலிருந்து சமந்தா விலக எண்ணுகிறாரா, அதெப்பட்டி ஒரு முன்னணி நடிகை புதுப்படங்களை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று கூறமுடியும் என்கிற கேள்விகள் எழுந்தன.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து இப்போது மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் சமந்தா. அதில், "நிச்சயமாக சினிமாவிலிருந்து நான் விலகவில்லை. கடந்த எட்டு மாதங்களாக ஓய்வில்லாமல் நடித்து வருவதால் தற்போதைக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடிப்பதாக உள்ளேன்.

மீடியா

மீடியா

அதிகப் படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நிதானமாக நடிக்கப் போகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன். அது புரியாமல் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டன பத்திரிகைள்.

வட சென்னை

வட சென்னை

ஜனதா கராஜ் படத்தில் தற்போது நடித்து வருகிறேன். அடுத்ததாக வட சென்னையில் நடிக்கப் போகிறேன். பொதுவாக நான் ஒரேசமயத்தில் ஐந்து படங்களில் நடித்துக்கொண்டிருப்பேன். அதற்குப் பதிலாக குறைந்த படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

அக்டோபருக்குப் பிறகுதான்

அக்டோபருக்குப் பிறகுதான்

எனவே புதிய படங்களில் நடிப்பதற்கு முன்பு நடித்துவரும் படங்களை முடிக்க எண்ணுகிறேன். அக்டோபரிலிருந்துதான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள ஆரம்பிப்பேன்," என்று கூறியுள்ளார்.

English summary
Actress Samantha says that she wont quit her movie career. "I would like to commit selective movies from October', Samantha says further.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil