விவாகரத்துக்குப் பின் விடுதலை பறவையான சமந்தா.. ஆன்மிக சுற்றுலாவுக்கு பிறகு என்ன செய்யுறாரு பாருங்க!

சென்னை: நடிகை சமந்தா ஓவியம் வரைவதில் படு பிசியாக மாறியுள்ளதாக பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், தனது தோழியுடன் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டார் நடிகை சமந்தா.

இந்நிலையில், மன ஆறுதலுக்காக புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி மன நிம்மதி அடைந்து வருகிறார்.

சமந்தா விவாகரத்து

சமந்தா விவாகரத்து

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை நடிகை சமந்தா பிரிவதாகவும், மனைவி சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யாவும் சமீபத்தில் அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். சமந்தா - நாக சைதன்யா விவாகரத்தில் நடிகை சமந்தா பற்றிய அவதூறு கருத்துக்கள் அதிக அளவில் பரவின.

மான நஷ்ட வழக்கு

மான நஷ்ட வழக்கு

சமந்தாவுக்கு பல தொடர்புகள் இருப்பதாக அவருடைய பெயரை டேமேஜ் செய்யும் வகையில் வீடியோக்களை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்த நிலையில், நீதிபதி உரிய நேரத்தில் விசாரிப்போம் என கண்டித்துள்ளார்.

டாக்டர் பல்டி

டாக்டர் பல்டி

சமந்தா குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பிய டாக்டர் சி.எல். வெங்கட் ராவ் மீது நடிகை சமந்தா மான நஷ்ட வழக்கு தொடர்ந்த நிலையில், அந்தர் பல்டி அடித்த டாக்டர் வெங்கட் ராவ் சமந்தா தனக்கு பேத்தி மாதிரி என்றும் சமூக வலைதளங்களில் பரவிய கருத்தையே தான் பகிர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

நிம்மதி தேடி

நிம்மதி தேடி

காதல் கணவரை பிரிந்த சோகத்தில் வாடி வரும் நடிகை சமந்தா மன நிம்மதி தேடி ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு தனது தோழியுடன் ஆன்மிக சுற்றுலா சென்று வந்தார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பார்வைக்கு ஷேர் செய்திருந்தார்.

Recommended Video

என் Divorce-கு காரணம்? Samantha Opens Up | வைரலாகும் அதிர்ச்சி தகவல்
புது ஹாபி

புது ஹாபி

இந்நிலையில், தனது புது ஹாபியான ஓவியம் வரைவதை ஆரம்பித்துள்ளார் நடிகை சமந்தா. விவாகரத்துக்குப் பின் விடுதலை பறவையாக மாறியுள்ள சமந்தாவின் மனது ஓவியம் வரையக் கூடாது என்று சொன்னதாகவும் உடனே ஓவியத்தை வரைய ஆரம்பித்து விட்டேன் என்று அவர் ஷேர் செய்துள்ள புகைப்படத்திற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் கமெண்ட் செய்து லைக் போட்டு வருகின்றனர்.

புதிய விஷயங்களில்

புதிய விஷயங்களில்

விவாகரத்து குறித்த தகவல் பரவ தொடங்கிய போதே புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்த தொடங்கி விட்டார் நடிகை சமந்தா. சைக்கிளிங் செய்வது, போட்டிங் கற்றுக் கொள்வது என தன்னை பிசியாக வைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வரும் சமந்தா தற்போது ஓவியம் வரைய தொடங்கி உள்ளார்.

நல்ல விஷயத்திற்காக

நல்ல விஷயத்திற்காக

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓவியக் கலை வழியாக புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கை கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ள ஓவியர் மனோகர் சில்லுவேருவின் Hope Kosmos ஆர்ட் புராஜெக்ட்டிற்காக நடிகை சமந்தா இந்த ஓவியத்தை வரைந்துள்ளதாக கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாராவுக்கு பதிலாக

நயன்தாராவுக்கு பதிலாக

தனிப்பட்ட வாழ்க்கை இப்படி இருக்க சினிமா பக்கம் பார்த்தால் நடிகை சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலா படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும், நடிகை நயன்தாரா ஷாருக்கான் படத்தில் இருந்து வெளியேற போவதாக பேச்சு வார்த்தைகள் அடிபட்டு வரும் நிலையில், அவருக்கு பதிலாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X