Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சமந்தாவின் அடுத்த பிளான்... விவாகரத்து பற்றி அப்பா என்ன சொல்றார்
சென்னை : சென்னை பொண்ணான சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2017 ல் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, சமீபத்தில் இருவரும் பிரிவதாக முடிவை அறிவித்துள்ளனர். இதற்காக சமந்தாவிற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமந்தா, நாக சைதன்யா இருவருமே ஒன்றாக பிரிவை அறிவித்து ஒரு வாரம் ஆகி விட்டது. இருந்தாலும் சமந்தாவின் விவாகரத்து தொடர்பாக பல வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. பல கேள்விகளையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
மீண்டும் பெயரை மாற்றிய சமந்தா... சோகத்தில் ரசிகர்கள்

மீண்டும் பெயர் மாற்றம்
பிரிவை அறிவித்த பிறகு சோஷியல் மீடியாவில் தனது பெயரை மீண்டும் சமந்தாருத் பிரபு என்று மாற்றிக் கொண்டுள்ளார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு சமந்தா மும்பை சென்று செட்டில் ஆக போவதாக ஒரு தகவல் பரவியது. இதனை மறுத்த சமந்தா, தொடர்ந்து தான் ஐதராபாத்தில் தான் வசிக்க போவதாக தெளிவுபடுத்தி விட்டாரா.

அதே வீட்டில் சமந்தா
திருமணமானது முதல் நாக சைதன்யாவுடன் அவர் வசித்து வந்த அதே வீட்டில் தான் தொடர்ந்து சமந்தா வசிக்க போகிறாராம். நாக சைதன்யா ஏற்கனவே, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதால், நாக சைதன்யாவுடன் பேசி தான் இந்த வீட்டிலேயே தொடர்ந்து தங்கும் முடிவை சமந்தா எடுத்துள்ளாராம்.

அப்பா என்ன சொல்றார்
இவர்களின் பிரிவு பற்றி சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபுவிடம் கேட்ட போது, இந்த தகவலை கேட்டு எனது மனம் அதிர்ச்சியில் blank ஆக உள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டிருப்பது தெரியும். விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என நம்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. நிறைய யோசித்த பிறகு தான் என் மகள் இந்த முடிவை எடுத்திருப்பாள் என நம்புகிறேன் என்றார்.
Recommended Video

கடந்து செல்ல நினைக்கும் சமந்தா
தனது வாழ்வில் இந்த துரதிஷ்டவசமான காலத்தை தான் கடந்த செல்ல நினைப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார். இது பற்றி சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், இந்த உலகை மாற்ற வேண்டும் என நினைத்தால், முதலில் நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது படுக்கையில் இருக்கும் தூசியை தட்டாமல் நான் படுக்க முடியாது. நான் என்னவெல்லாம் செய்ய கனவு காண்கிறோனோ அதற்கான அடித்தளத்தை நான் அமைக்க வேண்டும். அதற்காக பகலில் படுத்து நான் கனவு கண்டிருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

அடுத்த பிளான்
விவாகரத்து பிரச்சனையால் சிறிது காலம் பிரேக் எடுக்க நினைத்த சமந்தா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். தற்போது இவர் நடித்து முடித்துள்ள இரண்டு பெரிய படங்களான சாகுந்தலம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகியன ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் மேலும் நான்கு படங்களில் நடிக்க சமந்தாவிடம் பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

ரசிகர்கள் விருப்பம்
பாலிவுட் படங்கள் சிலவற்றிற்காக சமந்தாவிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் நாக சைதன்யாவுடனும் சமந்தா இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.