For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விவாகரத்தா...யாரு நாங்களா...வதந்திகளுக்கு சமந்தா கொடுத்த ஸ்மார்ட் பதில்

  |

  சென்னை : சென்னை பல்லாவரத்தில் பிறந்து, வளர்ந்தவரான சமந்தா, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியான முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். படங்கள் மட்டுமல்ல வெப்சீரிஸ் பலவற்றிலும் நடித்து, அசத்தி வருகிறார். இவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  சமீபத்தில் சாகுந்தலம் படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, அந்த பட டீமுக்கு குட்பை சொல்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். சாகுந்தலம் ஷுட்டிங்கை முடித்த கையோடு, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க சென்னை வந்து விட்டார் சமந்தா.

  மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த பெரிய கவுரவம்...குவியும் பாராட்டுக்கள் மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த பெரிய கவுரவம்...குவியும் பாராட்டுக்கள்

  ரொமான்டிக் காமெடி கதையாக, முக்கோண காதலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டு வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் சமந்தாவுடன் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

  காதலான நட்பு

  காதலான நட்பு

  சமந்தா, தனது நீண்ட கால நண்பரும் நடிகருமான நாக சைதன்யாவை 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகர் நாகர்ஜுனா - அமலா நட்சத்திர தம்பதியின் மூத்த மகனாவார். கவுதம் மேனன் தமிழில் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தை தெலுங்கில் ஏ மாய சீசாவே படத்தின் ஷுட்டிங்கின் போது சந்தித்து, பழக துவங்கினர். பிறகு அந்த நட்பு, காதலாக மாறியது.

  பெயரை மாற்றிய சமந்தா

  பெயரை மாற்றிய சமந்தா

  திருமணத்திற்கு பிறகு சமந்தா ரூத் பிரபு என இருந்த தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் திடீரென தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து அக்கினேனி என்ற பெயரை நீக்கினார் சமந்தா. பிறகு பெயரையே மெத்தமாக நீக்கி விட்டு, எஸ் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

  கணவருடன் விவாகரத்தா

  கணவருடன் விவாகரத்தா

  இதனால் சமந்தா, தனது காதல் கணவரை பிரிகிறார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போகிறார்கள் என பல விதமாக மீடியாக்களில் தகவல் பரவியது. ஆனால் அது பற்றி சமந்தா இதுவரை வாய் திறக்காமல், தனது சினிமா வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

  இதுக்கு தான் பெயர் மாற்றமா

  இதுக்கு தான் பெயர் மாற்றமா

  ஆனால் தற்போது விசாரித்த போது அப்படி எதுவும் இல்லையாம். தெலுங்கில் சமந்தா நடிக்கும் வரலாற்று காவியமான சாகுந்தலம் படத்திற்காக மட்டும் தான் சோஷியல் மீடியாக்களில் தனது பெயரை மாற்றினாராம். விவாகரத்து தகவல்கள் எல்லாம் வெறும் வதந்திகள் தானாம்.

  சமந்தாவின் ஸ்மார்ட் பதில்

  சமந்தாவின் ஸ்மார்ட் பதில்

  விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு தனக்கே உரிய ஸ்டைலில் மிக அழுத்தமான பதிலளித்துள்ளார் சமந்தா. அது என்னவென்றால், சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து கோவாவில் அதிக நிலப்பரப்பு கொண்ட ஒரு இடத்தை வாங்கி உள்ளார்களாம். இந்த இடத்தில் மார்டனாக பண்ணை வீடு ஒன்று கட்ட போகிறார்களாம். இதற்கான வேலைகளையும் அவர்கள் துவங்கி விட்டார்களாம்.

  அடேங்கப்பா செம

  அடேங்கப்பா செம

  இந்த பண்ணை வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை மிக அழகாக வடிவமைக்க ஸ்பெஷல் ஆர்கிடெக்ட் ஒருவரை நியமனம் செய்துள்ளார்களாம். தனித்துவமான இந்த பண்ணை வீடு, கோவா கடற்கரைக்கு அருகிலேயே அமைக்கப்படுகிறதாம். ஷுட்டிங் இல்லா சமயங்கள், முக்கிய நாட்களில் சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் ஜாலியாக ஓய்வு நேரத்தில் பொழுதை கழிக்க தான் இந்த தனித்துவமான வீட்டை ஸ்பெஷலாக அமைத்து வருகிறார்களாம். அதிக பொருட் செலவில், மிக பிரம்மாண்டமாக, ஹைடெக் - வேர்ல்ட் கிளாசில் இந்த பண்ணை வீடு அமைக்கப்படுகிறதாம்.

  Chaitra Reddy PREGNANT? | Chaitra Rakesh, Yaradi Nee Mohini
  இவங்களா விவகாரத்து பண்ண போறாங்க

  இவங்களா விவகாரத்து பண்ண போறாங்க

  ஆழமான காதலுடன் இருக்கும் இந்த தம்பதி, விவாகரத்து செய்ய போகிறார்கள் என வதந்தி கிளப்பியவர்களுக்கு இதை விட சரியான பதிலடி இருக்க முடியாது என டோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். இந்த தகவல் வெளியானதும், விவாகரத்து பற்றிய செய்திகள் அடங்கி போய் விட்டதாகவும் கூறப்படுகிறது.

  English summary
  after samanth changed her display name in social media, rumours spread that she would divorce naga chaithanya. for these rumours, samantha's smart and strong reply wins lots of hearts.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X