அதிரப்பள்ளி அருவி அருகே அசத்தல் போஸ் கொடுத்த சமந்தா.. வாழ்க்கை தத்துவம் வேற சொல்லியிருக்காரு!

சென்னை: கணவர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், பல இடங்களுக்கு சுற்றுலா செய்து வருகிறார் நடிகை சமந்தா.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!

அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் அவரது சுற்றுலா புகைப்படங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது அதிரப்பள்ளி அருவி அருகே செம அழகாக சிகப்பு உடையில் சமந்தா கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதிரப்பள்ளி அருவி அருகே சமந்தா

அதிரப்பள்ளி அருவி அருகே சமந்தா

கணவர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், வட இந்தியாவின் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்ற நடிகை சமந்தா, சமீபத்தில் ஸ்விட்சர்லாந்து வரை சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி இருந்தார். இந்நிலையில், தற்போது அதிரப்பள்ளி அருவி அருகே இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சிகப்பு நிற உடையில்

சிகப்பு நிற உடையில்

சிகப்பு நிற டாப்ஸ் மற்றும் சிகப்பு நிற ஷாட்ஸ் அணிந்து கொண்டு அருவிக்கு அருகே உள்ள ஒரு பாறையில் நின்றபடியும், அருவியின் அழகை ரசித்தபடி அமர்ந்தும் நடிகை சமந்தா கொடுத்துள்ள அசத்தலான போஸ் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன. சில மணி நேரங்களில் 2 மில்லியன் ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக் போட்டுள்ளனர்.

டிடி கமெண்ட்

டிடி கமெண்ட்

நடிகை சமந்தாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ஏகப்பட்ட பிரபலங்கள் அவருக்கு லைக் போட்டும் கமெண்ட் போட்டும் வருகின்றனர். விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன் இரு எமோஜிக்களை கமெண்ட்டாக போட்டுள்ளார். மேலும், ஏகப்பட்ட ரசிகர்கள் தலைவி தரிசனம் என கமெண்ட் செய்து சமந்தாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை தத்துவம்

நடிகை அமலா பாலை போலவே சமந்தாவும் வாழ்க்கை தத்துவங்களை தனது புகைப்படங்களுடன் சேர்ந்து கேப்ஷனாக போட ஆரம்பித்துள்ளார். "You enjoy it or endure it as it comes and goes ,as it ebbs and flows" என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். அருவி போல வாழ்க்கையை ரசிக்கவும் அதன் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை சகித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரபிக் குத்து

அரபிக் குத்து

நடிகை சமந்தாவுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் கடந்த இரு ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வந்த நிலையில், விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே நடனமாடிய அரபிக் குத்து பாடலுக்கு விமான நிலையத்தில் இருந்தபடியே நடனமாடி சண்டையை சமாதானத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் சமந்தா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமந்தாவின் நடனத்திற்கு பூஜா ஹெக்டேவும் லைக் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்திக்கு வாழ்த்து

கீர்த்திக்கு வாழ்த்து

விஷ்ணு ஜி ராகவ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கோர்ட் டிராமா படமான Vaashi படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஷேர் செய்த சமந்தா நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸுக்கு தனது வாழ்த்துக்களை கூறினார். விரைவில் நடிகை சமந்தாவின் சகுந்தலாதேவி மற்றும் காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X